
சமீபத்தில், திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா தம்பதியினர், புது கார் வாங்கியுள்ளார். இது தொடர்பான தகவலை அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். சினி பிரபலங்கள் போலவே சீரியலின் மூலம் காதலில் விழும் ரியல் ஜோடிகளின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகத்தான் செய்கிறது.
சினிமாவில் ஜோடியாக நடிச்சவர்கள் இடையே காதல் மலர்ந்து அவர்கள் நிஜ வாழ்க்கையில் சேர்வது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. சின்னத்திரையிலும் அப்படி நிறைய ஜோடிகள் சேர்ந்திருக்கின்றன ராஜா ராணி 1-சீரியல் ஆல்யா மானசா -சஞ்சய். சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா - தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்.
அந்த வரிசையில், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் ''திருமணம்''. இந்த சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா ஜோடிகள் இருவரும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பின.
சித்து, விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில்ஆல்யா மானசாவிற்கு ஜோடியாக நடித்து சீரியல் பிரியர்களின் மனதை கொள்ளையடித்தது வருகிறார். ஷ்ரேயா ஜீ தமிழ் சீரியல் ஒன்றில்பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு அவர்கள் தற்போது MG மாடல் கொண்ட ஒரு புது காரை வாங்கி இருக்கின்றனர். அதன் உடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோவை அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றனர். மேலும், அதன் விலை, சென்னையில் மட்டும் 23 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.