Valimai Collection: வெளிவந்த 4 நாளில் வசூலில் கோடிகளை குவித்த வலிமை...! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா..?

By Anu Kan  |  First Published Feb 28, 2022, 12:26 PM IST

Valimai Collection: ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. வலிமை, வெளிவந்த 4 நாளில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.


ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. வலிமை,வெளிவந்த 4 நாளில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

Tap to resize

Latest Videos

போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்  பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. முதல் நாளிலேயே மார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்திருந்தது.

தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.  ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது.  மேலும், இப்படத்தின் மற்ற வசூல் விவரங்கள் குறித்த விவரமும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், வலிமை திரைப்படம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. ஆம், நான்கு  நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டு வசூல் விவரத்தின் படி, அஜித்தின் வலிமை திரைப்படம் 4 நாள் முடிவில் ரூ. 85 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

click me!