#BREAKING இல்லதரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி... இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

Published : Feb 15, 2021, 09:50 AM ISTUpdated : Mar 01, 2021, 10:27 AM IST
#BREAKING இல்லதரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி... இன்று முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைத்தனர். ஜூன், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், டிசம்பர் மாதத்தில் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 வீதம் 100 விலையேற்றம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாற்றவில்லை.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 2-வது முறையாக எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் ஒரு கேஸ் சிலிண்டர் (14.2 கிலோ) விலை 769 ரூபாயாகவும், சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் 785 ரூபயாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு மீது மாநிலங்கள் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் மாற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து
Healthy Breakfast Ideas : 60 வயதிலும் சுறுசுறுப்பா இருக்கனுமா? 'தினமும்' காலைல இதை சாப்பிடுங்க