No CAA, No NPR, No NRC மட்டுமின்றி, No மோடி என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கோலத்தில் தாமரையை மலர அதிரடி..! ஆக... கோலமாவு வியாபாரிகளுக்கு நல்ல பிசினஸ் தான்..!
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, வசிக உள்ளிட்ட கட்சிகள் கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தார்.
undefined
No CAA, No NPR, No NRC மட்டுமின்றி, No மோடி என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வீடுகளில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டது.
வீட்டு வாசல்களில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிப்பது, தற்போது டிரெண்டாகி வரும் நிலையில், சென்னை, வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமாவளவன், கோலமிட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் கோலத்தில் தாமரையை மலர செய்து கோலமிட்டு உள்ளனர்.
இந்த கோலங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், இதன் மூலம் கோலமாவு வியாபாரிகளுக்கு நல்ல பிஸினஸ் தான் போங்க என நினைக்க வைக்கிறது.