விரைவில் ... பொருளாதாரத்தில் இந்தியா 3 ஆவது இடம்..!

By ezhil mozhiFirst Published Dec 31, 2019, 5:26 PM IST
Highlights

சர்வதேச செலாவணி நிதியம் வெளியிடும் ஆதாரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த புள்ளி விவரத்ததை கொண்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. 

விரைவில் ...  பொருளாதாரத்தில் இந்தியா 3 ஆவது இடம்..! 

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்றும், அதே போன்று 2034 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி சென்று மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்றும்  இங்கிலாந்தின் பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் வெளியிடும் ஆதாரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த புள்ளி விவரத்ததை கொண்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது என்றும் அடுத்த பதினைந்து ஆண்டுகள் கழித்தபிறகு மூன்றாம் இடத்தை பிடிக்க ஜப்பான் ஜெர்மனி இந்தியா உள்ளிட்ட நாடுகள் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவித்துள்ளது

2024 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் டாலராக உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை 2026 ஆம் ஆண்டு இந்தியா அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது

அவ்வாறு முந்தும் தருணத்தில் ஜெர்மனியை முந்தி நான்காவது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!