மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..!

By ezhil mozhiFirst Published Dec 31, 2019, 6:30 PM IST
Highlights

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 உயர்ந்து 3738 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 128 உயர்ந்து 29 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..!

வாரத்தின் இரண்டாவது வர்த்தக  தினமான இன்று தங்கம் கிராமுக்கு ரூ.16  உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 உயர்ந்து 3738 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 128 உயர்ந்து 29 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.4 உயர்ந்து 3742.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி ஒரு கிராமுக்கு 60 பைசா உயர்ந்து 50.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

click me!