உடல் எடையைக் குறைக்கவும், நல்ல தூக்கம் பெறவும் மாலை 6 மணிக்குப் பிறகு நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
உடல் எடைக்கு கலோரி மட்டுமே காரணம் அல்ல. உடலில் இருக்கும் கொழுப்பை எவ்வாறு கரைப்பது என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். உடல் எடை குறைப்பதற்கு, நல்ல தூக்கம் பெறுவதற்கு நீங்கள் சிலவற்றை கடைபிடித்தே ஆக வேண்டும். உடல் எடையைக் குறைக்கவும், நல்ல தூக்கம் பெறவும் மாலை 6 மணிக்குப் பிறகு நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
1. காபி மற்றும் காஃபின் அடிப்படையிலான பானங்கள்: ஒரு கப் காபி குடித்தால் 6 மணி நேரம் வரை தூக்கம் வராது. காபியில் இருக்கும் காபின் உடல் எடையை குறைக்க உதவும். ஆனால், இரவு நேரத்தில் குடித்தால் தூக்கம் தடைபடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் காபியை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
undefined
2. சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் பழங்களை தவிர்க்கவும்: பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பழங்களை உட்கொண்டால் செரிமானத்தை தடுக்கலாம், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. சர்க்கரை தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும். அதனால்தான் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ள பழங்களை மாலை 6 மணிக்கு முன்பு சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
Coriander Seeds: நீரிழிவைத் தடுக்கும் கொத்தமல்லி விதைகள்: இது எப்படித் தெரியுமா?
3. இரவு உணவை அதிகமாக சாப்பிடக் கூடாது: நாள் முழுவதும் போதுமான அளவு சாப்பிடாமல், பின்னர் இரவு உணவின் போது அதிகமாக சாப்பிடுவது கலோரியை அதிகரித்து விடும். உடல் எடை குறைப்பதில் சிக்கல் ஏற்படும். உடலை வங்கி போல நினைத்துக் கொண்டு, நினைத்தபோது அளவுக்கு அதிகமாக வயிற்றில் உணவை தள்ளக் கூடாது. இது ஒருபோதும் எடை குறைய உதவாது.
4. மாவு அடிப்படையிலான உணவுகள்: மாலையில் நமது வளர்சிதை மாற்றம் குறைவதால், இரவு உணவிற்கு கார்போஹைட்ரேட்டுகள், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. கார்போஹைட்ரேட் உணவுகளை இரவில் உடலால் ஜீரணிப்பது கடினம். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதுவும் தூக்கத்தை பாதிக்கும். மைதா மாவு, பிரட், சாதம், சோடா, பாஸ்தா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவை உடல் எடையை அதிகரிக்கும்.
Egg: முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் இவை தான்!
5. இரவு நேர சிறு தீனி: இரவு நேரங்களில் சிலர் சிறுதீனி விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் கெடுதலானது. இதில் இருக்கும் அதிகப்படியான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் தங்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்பதுடன், உடல் எடை குறைவதற்கும் உதவாது.