மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கிறீர்களா... அப்ப ரூ.20 லட்சத்தை இன்னுமா வாங்கல..!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2019, 12:47 PM IST
Highlights

ரூ.20 லட்சம் வரை செக்யூரிட்டி  இல்லாமல் கடன் கொடுக்கிறது 

எந்தவித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை கிராம வங்கி சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதால் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழ்நாடு கிராம வங்கியின் மாநில அளவிலான மாபெரும் வங்கிகடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, ’’கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை, எளிய மக்களை தமிழக கிராம வங்கி விடுவிக்கிறது. பாண்டியன், பல்லவன் கிராம வங்கி இணைந்து தமிழக கிராம வங்கியாக செயல்படுகிறது. விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், ஏழைகளுக்கு மட்டுமே கடனுதவி  வழங்குகிறது.

கடன் வாங்கியவர்களில் 99 சதவிகிதம் பேர் திருப்பி அளித்து சாதனை படைத்துள்ளனர். முதல்வராக இருந்தால் கூட வங்கிகள் செக்யூரிட்டி வாங்கி கொண்டுதான் கடன் கொடுக்கும். ஆனால், கிராம வங்கி சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை செக்யூரிட்டி  இல்லாமல் கடன் கொடுக்கிறது என அவர் கூறினார். எடப்பாடி அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
 

click me!