கனமழை எச்சரிக்கை..! தமிழக மக்கள் குஷியோ குஷி..! குடையை ரெடியா வெச்சுக்கோங்க..!

By ezhil mozhiFirst Published Jul 20, 2019, 5:42 PM IST
Highlights

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்கு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அங்கு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பம்பை ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஆலப்புழாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தின் நிலை..! 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையின் நிலை..! 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!