Vijay fans: பீஸ்ட் பாடலுக்கு கேரளாவில் இருக்கும்...விஜய் ரசிகர்கள் வெறித்தமான கொண்டாட்டம்... வைரல் வீடியோ..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 02, 2022, 08:16 AM IST
Vijay fans: பீஸ்ட் பாடலுக்கு கேரளாவில் இருக்கும்...விஜய் ரசிகர்கள் வெறித்தமான கொண்டாட்டம்... வைரல் வீடியோ..!

சுருக்கம்

Vijay fans: பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து செம ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமான நடனம் ஆடி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து செம ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமான நடனம் ஆடி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம்அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக  உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதிஅபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது.

இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது. 

பொதுவாக ஒரு பாடல் ட்ரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' பாடலை மட்டும் ரசிகர்கள் சும்மாவா விடுவார்கள்.

அந்தவகையில் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடலுக்கு தற்போது ரீல்ஸ் 100 ரை தொட்டுள்ளது என இசையமைப்பாளர் அறிவித்துள்ளார்..மேலும், அரபிக் குத்து தற்போது வரை 110 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் உள்ள கல்லூரி ஒன்றில், விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து, அரபிக் குத்து பாடலுக்கு வெறித்தனமான நடனம் ஆடி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்