
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அதில், ஏராளமான பாடல்கள் ஹிட் அடித்துள்ளனர். சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில், இவர் எழுதிய சூரரைப் போற்று, படத்தில் வரும் ''காட்டு பயலே பாடல்'' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து, இவரும் வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து, சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார். நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நடித்துள்ளார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆனா நிலையில், சினேகன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
கன்னிகா ரவி சமூக வலைத்தளங்களில் எப்போது ''ஆக்டிவாக'' இருப்பார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான செய்திகளை பகிர்ந்து கொள்வார். இவருடைய வீடியோவான சிலம்பம் சுற்றுவது, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டவை. அதில், அவருடைய முடி தோரணையாக பார்ப்பவர்கள் ரசிக்கும் படி இருக்கும். அவருடைய பல புகைப்படங்களிலும், முடி அழகான மயில் தோகை போன்று காட்சி தரும்.
இந்நிலையில், சமீபத்தில் கன்னிகா ரவி அளித்துள்ள பேட்டி ஒன்றில், அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் முடி தான் தாரக மந்திரம். அது தான் என்னுடைய அடையாளம் என்பதில் தொடங்கி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முடி வளர்வதற்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் 25% உடற்பயிற்சியுடன், 75% உணவு தான் எனக்கு உதவியது, என்று மனம் திறந்து பேசியுள்ளார். நான் தினமும் பின்பற்றும், வாழ்கை முறை இவைதான் என்றார். அவைகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்துகொள்ளாம்.
1. மார்னிங் ஹாட் வாட்டர்:
தினமும் அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் மார்னிங் ஹாட் கட்டாயம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது.
பால் பொருட்களை தவிர்த்து தினமும் ''block coffee''விரும்பி குடிப்பேன்.
2. முளைகட்டிய பச்சை பயிறு: நார்சத்து அதிகம், வைட்டமின் C அதிகமாக இருப்பதால் காலை உணவாக கட்டாயம் எடுத்து கொள்வேன்.
பச்சை பயிரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வேன், அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்து குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பேன். (பகல் நேரத்தில் ஊர வைப்பது சிறந்தது )
அதன்பின் நீரை வடித்துவிட்டு ஒரு ஓட்டையான பாத்திரத்தில் பச்சை பயிரை வடித்து எடுத்துக் கொள்வேன். ( இரவு தூங்கும் முன்பு வடித்து கொள்வது சிறந்தது). பிறகு அதனை, ஒரு காட்டன் துணியால் சுற்றி சிறிது காற்று நுழைவதற்கு இடைவெளி விட்டு தட்டால் மூடி வைப்பேன். இதனை 12 மணி நேரம் கழித்து (காலையில்) எடுத்து பார்த்தால், முழுவதுமாக மல்லிகை பூ போல முளைத்து இருக்கும். பச்சை வேர்க்கடலை சாப்பிடுவது போன்று இருக்கும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதனை பச்சையாக அப்படியே சாப்பிடுவேன். சில சமயம் மாதுளம் பழம் சேர்த்து சாப்பிடுவேன்.
3. மதிய வேளையில்:
மூன்று காய்கறியுடன், சாதம் குறைவான அளவு எடுத்து கொள்வேன். அதிக அளவு கீரை எடுத்து கொள்வேன்.
4. ஈவினிங் டைம்: பழங்கள், ஊற வைத்த 50 பாதாம், நட்ஸ் வகைகள் எடுத்து கொள்வேன்.
5. இரவு வேளையில்: அவுல், சப்பாத்தி, இட்லி, குறைந்த அளவு எடுத்து கொள்வேன்.
6.உணவை சரியான நேரத்தில், சாப்பிடுவது நல்லது. காலை (7 முதல் 8), மதியம் (1முதல் 2) இரவு (7முதல் 8)
7. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம். இதனை பின்பற்றினால் முடி நன்கு வளரும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.