ஜிம்முக்கு போகாவும், வொர்க்அவுட் செய்யவும் டைம் இல்லையா...? உடல் எடையை குறைக்க சிம்பிள் 4 டிப்ஸ் இருக்கு...!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 03, 2022, 08:06 AM IST
ஜிம்முக்கு போகாவும், வொர்க்அவுட் செய்யவும் டைம் இல்லையா...? உடல் எடையை குறைக்க சிம்பிள் 4 டிப்ஸ் இருக்கு...!!

சுருக்கம்

உடல் எடையை குறைப்பது என்பது, மன அழுத்தத்தை போக்கி நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  வழிவகை செய்கிறது.

உடல் எடையை குறைப்பது என்பது, மன அழுத்தத்தை போக்கி நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  வழிவகை செய்கிறது.

இன்றைய நவீன உணவு பழக்கவழக்கம், நம்முடைய வாழ்கை முறையில் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. நாம் பெரும்பாலும், உடல் எடையை குறைப்பதற்கு, உடற்பயிற்சி, கலோரி குறைவான உணவுகளை உட்கொள்வது, பசியை கட்டுப்படுத்துதல், சரியான அளவு தண்ணீரைக் குடிப்பது போன்ற வழிகளை பின்பற்றி வந்தோம். ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், நம்மில் பெரும்பாலோனோர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஒரு சில மாதங்களுக்கு பிறகு கைவிட்டு வருகிறோம். அவர்கள், உடல் எடையை குறைக்க உணவில் சிறு மாறுதல்களை கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். 

இருப்பினும், ஒருவர் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியாது என்று நம்புவது கிட்டத்தட்ட தவறானது. நீங்கள் உடல்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிந்து கொழுப்பை குறைகிறது. இதனால் உடல் எடை குறையும். அதேநேரத்தில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் உடல் எடை குறையும் என கூறிவிட முடியாது. மாறாக உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உடல் எடையை குறைக்கலாம். 

வீட்டிலேயே சமைத்த உணவுகள்:

வீட்டிலே சமைத்த உணவுகளை மட்டுமே, சாப்பிடுவது அனைத்து வகைகளிலும் நல்லது. இது உங்கள் செலவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் உணவில் என்னென்ன பொருள்களை சேர்க்க வேண்டும் மற்றும் அதன் அளவை நீங்களே முடிவு செய்யலாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுவது குறைவாக சாப்பிடுவதையும், ஆரோக்கியமாக மாறுவதையும் நிரூபிக்கிறது.

உணவை, பிரித்து சாப்பிடுங்கள்:

சிலர் தங்கள் உணவை சாப்பிடும் போது அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது தவறு. உங்கள் உணவை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். வேகமாக சாப்பிடுவது அதிகமான கலோரிகளைப் பெறுவதோடு தொடர்புடையது. எனவே, மெதுவாக சாப்பிட்டால் குறைந்த அளவு உணவு சாப்பிட்டாலே உங்களை முழுதாக உணர வைக்கிறது மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளைப் பெற உதவுகிறது. இதனால் அதிக அளவு சாப்பாடு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதேபோன்று, உணவுகளை மூன்று வேளைக்கு ஐந்து வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்:

கீரை வகைகள், பயிறு வகைகள், பழங்கள், முட்டை, இறைச்சி, போன்ற ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். விஞ்ஞான ரீதியாக உங்களைச் சுற்றியுள்ள அதாவது நீங்கள் அடிக்கடி பார்க்கும் உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். ஆரோக்கியமான உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஆனால், ஆரோக்கியமற்ற எண்ணெய் பண்டங்கள், பேக் செய்யப்பட்ட உணவு, குளிர்பானங்கள், வறுத்த கோழி, துரித உணவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. எனவே, மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை எளிமையாக குறைக்க வாழ்த்துக்கள்!


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்