
திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். அவர்களை தொடர்ந்து, நாம் வழிவழியாக சில சம்பிரதாயங்களை தொன்று தொட்டு கடைபிடித்து வருகிறோம். அவற்றில், முக்கியமானது வீட்டில் எவ்வளவு வசதி, வாய்ப்பு இருந்தாலும், பணம் முதல் மற்ற விஷயங்களை இரண்டாம் பட்சமாக கருதி, சிலர் ராசி பலன்களை அடிப்படையாக கொண்டே திருமணங்களை முடிவு செய்கின்றனர். திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. இவைகளை தாண்டி, ஆன்மிக ரீதியாக சில விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில், ராசிபலன்களை வைத்து இவர்கள் இடையே ஒத்து போகுமா என்பது கணிக்கப்படுகிறது.
அதில், ஜோதிடத்தின் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
சிம்மம் மற்றும் கன்னி:
அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள் தான். மேலும், இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகமாகும்.
மீனம் மற்றும் சிம்மம்:
இந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்துக் கொண்டால் தொடக்கத்தில் அவர்கள் காதலில் திளைத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இருவருக்கும் எண்ணங்கள் ஒத்துப்போனாலும், போக போக இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால் இருவருக்கு இடையே விரிசல் ஏற்படும். எனவே, சில நாட்களில் பிரிவு ஏற்பட்டுவிடும்.
சிம்மம் மற்றும் ரிஷபம்:
இந்த இரண்டு ராசிக்காரர்களும், உடல் மற்றும் மனதளவில் ஒரே மாதிரியான நிலையை எதிர்பார்ப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி மனப்பான்மை, நாளடைவில் பிரிவிற்கு காரணமாக அமையும். மொத்தத்தில், இந்த இரண்டு ராசிகளும் பொருந்தாத ராசிகள்.
மிதுனம் மற்றும் கடகம்:
இந்த இரண்டு ராசிக்காரர்களும் மிகவும் சாந்தமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். ஆனால் கடக ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரரிடம் அதிக அன்பு செலுத்தினால், இருவரிடமும் எவ்வித பிரச்சனையும் வராது. இல்லையெனில், குடும்பத்தில் விரிசல் எட்டி பார்க்கும்.
தனுசு மற்றும் மகரம்:
இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால், தனுசு ராசி பொதுவாக காதல், அன்பு, அழகு, பொறுமை ஆகிய பண்புகளையும், மகரம் ராசி எதிர்பாராத விடயங்களை செய்யும் பண்பை கொண்டிருப்பதால், இந்த இரண்டு ராசிகளுக்கும் ஒத்துப்போகாது. மேலும், இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.
கும்பம் மற்றும் கடகம்:
இந்த ராசிக்காரர்கள் இருவருமே எந்த ஒரு விடயத்தையும் மனதிற்குள்ளயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் நம்பகத்தன்மை குறைவாக இருக்கும். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததால் பிரச்சனைகள் ஏற்படும்.ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நினைத்தால் வாழ்க்கையை சிறப்பாக மாற்றலாம்.
துலாம் மற்றும் மீனம்:
துலாம் மற்றும் மீனம் ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். துலாம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் மீனம் ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர் இருவர்களுக்கும் இடையே உண்டாகும் பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.