
தனக்கு தானே பேசிக்கொள்வதன் மூலம் நீங்கள் ''பாசிட்டிவாக'' வாழ முடியும் என்று, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஆம், தனக்கு தானே பேசிக்கொள்பவர்களை பார்க்கும் போது, முதலில் கேட்கும் கேள்வி நீங்கள் பைத்தியமா? என்று தான். ஆனால், தனக்கு தானே பேசிக்கொள்வது மனநோய் அல்ல, உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரோனா வேரியன்ட் ஓமைகிறான், உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இவை தவிர, வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள், சுற்றுப்புற மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்கொள்ள இந்த வருடத்தில் நாம் தயாராக வேண்டும் என்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வருடம், சமூகம் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றவற்றிலிருந்து மீண்டுவரும் முயற்சியில் நாம் 'கத்தியின் விளிம்பில்' இருக்கிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகி வருகிறது. எனவே, நாம் இந்த 2022 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற எண்ணங்களைக் கைவிடுவது அவசியமாகிறது. எதிர்வரும் சவால்களை தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
அதற்காக நாம் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே, நம்மை நாமே பாசிட்டிவாக மாற்றும் செயல்களில் கட்டாயம் ஈடுபட வேண்டும். அவற்றில் சில எளிய யோசனை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, தனக்கு தானே பேசிக்கொள்ளும்போது கேள்விகள், யோசனைகள் ஒருவருக்கு வெளிப்படும் என்றும், எண்ணங்களும், நம்பிக்கைகளும் வலுப்பெறும் எனத் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேர்மறை மற்றும் எதிர்மறை என இதில் இரண்டு வகைகளும் இருப்பதாக சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், அவ நம்பிக்கை உடையவர்களுக்கு இந்த போக்கு எதிர்மறையாக அமைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், தனக்கு தானே பேசிக் கொள்வதன் மூலம் அந்த எண்ண ஓட்டத்தை மாற்றி நேர்மறையானவர்களாக மாறிவிடலாம். தவறுகளை திருத்திக் கொள்ள திட்டிக் கொள்வது, தோல்வியின்போது நம்பிக்கை கொள்ள முயற்சி செய்வது உங்களை நேர்மறையானவர்களாக மாற்றும்.
லட்சியத்தையும், யோசனைகளும் திரும்ப திரும்ப எண்ணும்போது சரியான வழியில் பயணிக்க தனக்கு தானே பேசிக்கொள்ளும் முறை உதவும். இதன்மூலம் உங்களின் மன அழுத்தம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவையும் கூடும் என கூறும் ஆய்வாளர்கள், செய்யும் வேலையை சிறப்பாக செய்வீர்கள் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசனைகளை நாடுவது அவசியமாகும். கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மன உளைச்சல், பாதிப்பு மற்றும் ஏமாற்றத்தையும் அதிக அளவில் ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டினை நாம் அனைவரும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டு 'பாசிட்டிவ்' நோக்கத்துடன் எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்வோம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.