தமிழர்களை பார்த்து மொழி பற்றை கற்றுக்கொள்ள வேண்டும்! கன்னடர்களை செவுட்டில் அடித்து சொன்ன சித்தராமையா..!

Published : Apr 09, 2019, 01:53 PM IST
தமிழர்களை பார்த்து மொழி பற்றை கற்றுக்கொள்ள வேண்டும்! கன்னடர்களை செவுட்டில் அடித்து சொன்ன சித்தராமையா..!

சுருக்கம்

மொழி விஷயத்தில் நாம் தமிழர்களை பின்பற்ற வேண்டுமென கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

மொழி விஷயத்தில் நாம் தமிழர்களை பின்பற்ற வேண்டுமென கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, "கன்னட மக்களிடம் பொதுவாகவே மொழிப்பற்று குறைவாக உள்ளது... அந்த விஷயத்தில் தமிழர்கள் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்றினை போன்றே கன்னட மக்களும் பின்பற்ற வேண்டும்....

கன்னட மக்கள் கன்னட மொழியில் பேசுவதை விட ஆங்கிலம் இந்தி உட்பட பிற மொழிகளில் பேசுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். மற்ற மொழிகளில் பேசுவதையே விருப்பமாகவும் கொண்டுள்ளனர்.இது இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே இது நமக்குப் பழகி விட்டது..

ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு நேர் மாறாக உள்ளது. தமிழர்கள் தமிழ் மொழிக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். உயிருக்கு நிகராக தமிழ் மொழியை நேசிக்கிறார்கள். தமிழர்களைப் பார்த்து மொழிப்பற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கன்னட மக்களின் செவுட்டில் அடிப்பது போல் கூறி உள்ளார் சித்தராமையா

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Drinks: உடல் எடையைக் குறைக்க உதவும் 6 சூப்பர் டிரிங்க்ஸ்
Pressure Cooker: பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க