காடை வாங்கினா ஒருமுறை இப்படி வறுவல் செஞ்சு பாருங்க... சூப்பரா இருக்கும்!

By Kalai SelviFirst Published Sep 24, 2024, 2:35 PM IST
Highlights

Kaadai Varuval Recipe : காடை வறுவல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஒன்று காடை. இதில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. கோழியை விட கூடுதல் சத்தும் உள்ளது. நீங்கள் காடை பிரியர் என்றால் உங்கள் வீட்டில் காடை வாங்கினால், எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாமல், ஒரு முறை காடை வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த காடை வறுவல் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். காடை வறுவல் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் சுலபமான முறையில் செய்து முடித்துவிடலாம். முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி காடை வறுவல் செய்து கொடுங்கள். அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கடை வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  சிக்கன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் 'காடை பிரியாணி' .. சூப்பரான டேஸ்ட்... ரெசிபி இதோ!

Latest Videos

காடை வறுவல் செய்ய தேவையான பொருள் :

காடை -  4
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  அசத்தலான சுவையில் கிரீன் சில்லி சிக்கன்.. இப்படி செஞ்சு அசத்துங்க..!

செய்முறை :

பாடல் வரிகள் செய்ய முதலில் எடுத்து வைத்த காடையை நன்கு கழுவி கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை சுமார் ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் காடை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காடை வறுவல் தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!