ஓட்ஸ் இருக்கா? அப்ப ஈவினிங் டீ டைம்ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

Published : Sep 23, 2024, 05:16 PM IST
ஓட்ஸ் இருக்கா? அப்ப ஈவினிங் டீ டைம்ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

சுருக்கம்

Oats Masala Vadai Recipe : மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது ஓட்ஸில் மசாலா வடை செய்து சாப்பிடுங்கள். சுவை அருமையாக இருக்கும்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் கடையில் வாங்கி தான் கொடுக்கிறீர்களா? இன்று அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருக்கிறதா அப்படியானால் அதை வைத்து சுவையான மசாலா வடை செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும் முக்கியமாக இந்த வடை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, மிகவும் விரைவில் செய்து முடித்து விடலாம். அது மட்டுமின்றி இது ஆரோக்கியமானதும் கூட. உங்கள் வீட்டில் உள்ளவர்களும் இந்த வடையை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். மலை வேளையில் டீ அல்லது காபியுடன் இந்த வடை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் ஓட்ஸ் மசாலா வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் .

இதையும் படிங்க:  ஈவினிங் டைம்ல டீக்கு மீல்மேக்கர் வச்சி இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!

ஓட்ஸ் மசாலா வடை செய்ய தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 3/4 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப் (2 மணி நேரம் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் -  1 
பெரிய வெங்காயம் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் -  தேவையான அளவு

இதையும் படிங்க:  அட..! சிக்கனில் வடை கூட செய்யலாமா..? ரெசிபி இதோ..!

செய்முறை :

ஓட்ஸ் மசாலா வடை செய்ய முதலில் ஊறவைத்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரடு முரடாக அரைத்து, பின் இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். இதனுடன் எடுத்து வைத்த ஓட்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பெருங்காயம், பெருஞ்சீரகம் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாகவும் எண்ணெய் நன்றாக சூடானதும், கையில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்த மாவை கையில் வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் ஆரோக்கியம் மற்றும் சுவையான ஓட்ஸ் மசாலா வடை ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Growing Garlic: வீட்டில் பூண்டு வளர்ப்பது எப்படி? ரொம்ப ஈஸி தெரியுமா?
Aadi Amavasai: முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க இந்த விஷயங்களை செய்யுங்க..! பலரும் அறியாத ரகசியம்