டேஸ்டான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

By Kalai Selvi  |  First Published Sep 21, 2024, 5:40 PM IST

Chicken Cutlet : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கனில் கட்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.


பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் அவர்களுக்கு பிடித்தவாறு. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

பொதுவாகவே குழந்தைகளுக்கு சிக்கன் என்றாலே ரொம்பவே பிடிக்கும். அப்படி அந்த சிக்கனை வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்டில் செய்து கொடுங்கள். அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மற்றும் இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் எளிதாக செய்து முடித்து விடலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிக்கன் கட்லெட் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!

சிக்கன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 250 கிராம் (வேக வைத்தது)
இஞ்சி பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 100 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
ரொட்டி தூள் - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: Soya Cutlet : குழந்தைகள் விரும்பும் சோயா கட்லெட்!- ஹெல்தியான ஈவினிங் ஸ்னாக்ஸ்!

செய்முறை :

சிக்கன் கட்லெட் செய்ய முதலில் எடுத்து வைத்த சிக்கனை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு வாசித்துக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் வதக்கவும். அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சிக்கன், மிளகு தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, பிறகு அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். அவை ஆரிய பிறகு உருண்டையாக பிடித்து, பின் கையில் வட்டமாக தட்டி, ரொட்டி துகள்கள் மேல் பிரட்டி போட்டு தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு தோசை கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இரண்டு பக்கமும் நன்கு பிரட்டி போட்டு பொன்னிறமாக எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!