மீன் வாங்கினால் ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் இப்டி செய்ங்க... ரெசிபி இதோ!

Published : Sep 23, 2024, 02:00 PM IST
மீன் வாங்கினால் ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் இப்டி செய்ங்க... ரெசிபி இதோ!

சுருக்கம்

Andhra Fish Kulambu Recipe : இந்த பதிவில் காரசாரமான சுவையில் ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

அசைவ உணவில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று மீன். மீனில் குழம்பு, தொக்கு, பிரை என பல ரெசிபிகள் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில், இந்த பதிவில் காரசாரமான சுவையில் ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சீக்கிரமே செய்து முடித்து விடலாம். உங்கள் வீட்டில் மீன் வாங்கினால் ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்து கொடுங்கள். ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  கேரள ஸ்டைல் பச்சை மாங்காய் மீன் குழம்பு ரெசிபி - பச்சை மாங்காய் நன்மைகள் அப்படியே கிடைக்கும்!!

ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

மீன் - 250 
கடுகு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1/4 கப்
பூண்டு - 4
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

மசாலா அரைப்பதற்கு...

எண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
கருப்பு மிளகு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 3/4 கப்
பூண்டு - 1/4 கப்
தக்காளி - 1/2 கப்

இதையும் படிங்க:  நாவூறும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு - இப்படி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்!

செய்முறை :

ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் சீரகம், பெருஞ்சீரகம், மிளகு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்கவும். அதன் பின் தக்காளியையும் அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இவை எல்லாவற்றையும் ஒரு தட்டு போட்டு ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதனை அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்  ஊற்றி சூடாக்கவும். பின் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் புளி கரைசல், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

இப்போது இதில் அரைத்து மசாலாவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கழுவி வைத்த மீனை அதில் போடவும். சுமார் 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவவும். அவ்வளவுதான் காரசாரமான சுவையில் ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு ரெடி.

இந்த பதிவி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்