குட்டீஸ்க்கு புடிச்ச உருளைக்கிழங்கு சப்பாத்தி ; தட்டு காலியாகும்!

By Kalai Selvi  |  First Published Sep 24, 2024, 6:00 AM IST

Potato Masala Chapati Recipe : குழந்தைகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்கில் மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.


உங்கள் வீட்டில் நீங்கள் அடிக்கடி சப்பாத்தி செய்றீங்களா? அதுவும் எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் செய்றீங்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வித்தியாசமான முறையில் சப்பாத்தி செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும் என்றால் அதை வைத்து உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்து கொடுங்கள். இந்த சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம். அதிக நேரம் எடுக்காது. மேலும் இந்த சப்பாத்தி சாப்பிடுவதற்கு ரொம்பவே மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு சைட் டிஷ் எதுவுமே தேவையில்லை. அந்த அளவிற்கு இது சுவை அருமையாக இருக்கும்.

Latest Videos

அடுத்த முறை நீங்கள் சப்பாத்தி செய்தால் இந்த உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க .. இப்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Egg Chapathi Roll : எல்லாருக்கும் பிடித்த எக் சப்பாத்தி ரோல் ! இப்படி செய்து பாருங்க!

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 3 ஸ்பூன்
கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: மீந்து போன சப்பாதியும், பன்னீரும் வச்சி இப்படி ஒரு டைம் டிபன் செய்ங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை :

உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்ய முதலில், எடுத்து வைத்த உருளைக்கிழங்கை கையால் நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு கொஞ்சமாக நெய் அல்லது என்னை விட்டு பிசையுங்கள்.

அதன் பிறகு அதில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து பாத்திமாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு மாவை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று நன்கு தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். தேய்க்கும் போது, அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். மென்மையாக தேய்க்கவும்.

இப்போது ஒரு சப்பாத்திகள் அல்லது தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு அதில் வைத்த சப்பாத்தியை போட்டு அதன் மேல் எண்ணை அல்லது நெய் தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!