Juice or Smoothie : ஜூஸ் vs ஸ்மூத்தி : காலை எது சிறந்தது?

Published : Jun 28, 2025, 01:34 PM ISTUpdated : Jun 28, 2025, 01:39 PM IST
kothavarangai juice

சுருக்கம்

ஸ்மூர்த்தி அல்லது ஜூஸ் இவை இரண்டில் எது காலையில் குடிப்பதற்கு சிறந்தது என்று இங்கு காணலாம்.

தற்போது பலர் தங்களது காலை உணவாக ஜூஸ் அல்லது ஸ்மூத்தி தான் குடிக்க விரும்புகிறார்கள். ஏனெனில் இதை தயாரிப்பதற்கு சில நிமிடங்களே ஆகும். மேலும் இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் காலை உணவின் சிறந்த தேர்வாகும். ஆனால் ஜூஸ் அல்லது ஸ்மூர்த்தி இவை இரண்டில் எது காலையில் குடிப்பதற்கு நல்லது என்று நீங்கள் எப்போதாவது இருக்கிறீர்களா? இவை இரண்டும் ஆரோக்கியமானது என்றாலும், உங்களது ஆரோக்கியத்தை பொறுத்து இவற்றில் எதை குடிப்பது நல்லது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே உங்களது காலை உணவில் ஸ்மூத்தி அல்லது ஜூஸ் சேர்ப்பதற்கு முன்பாக எது சிறந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்மூத்திகள் நன்மைகள் :

1. அதிக நார்ச்சத்து :

ஸ்மூத்திகளில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உதவும், திருப்தி உணர்வை தரும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

2. அதிக ஊட்டச்சத்துக்கள் :

ஸ்மூத்திகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பது போலவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

3. எடை இழப்புக்கு உதவும் :

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கும். இதனால் எடை இழப்புக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும்.

4. பிற பொருட்கள் :

ஸ்மூர்த்தியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை அதிகரிக்க அதில் விதைகள், தயிர், புரத பொடி போன்ற பிற பொருட்களை சேர்க்கலாம். அவை ஆரோக்கியத்திற்கு இரட்டிப்பான நன்மைகளை வழங்கும்.

ஸ்மூத்திகள் தீமைகள் :

- ஸ்மூத்தியில் சேர்க்கும் பொருட்களை குறித்து அதில் கலோரிகள் அதிகமாகும்.

- இனிப்பு தயிர், பழச்சாறு அல்லது சர்க்கரை பயன்படுத்தினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.

ஜூஸ் நன்மைகள் :

1. செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள் :

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. அவை உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.

2. ஜீரணிக்க எளிது :

முழு பழங்கள் அல்லது காய்கறிகள் சிலருக்கு ஜீரணிக்க சிரமமாக இருக்கும் அவர்களுக்கு பழசாறு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஜூஸ் தீமைகள் :

- ஸ்மூதிகளில் காணப்படும் நார்ச்சத்துக்கள் ஜூஸில் இருக்காது. குறைவான திருப்திகரமான அனுபவத்தை தான் வழங்கும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.

- பழசாறுகளில் கூழ் நீக்கப்படுவதால் முழு பழம் அல்லது காய்கறிகளில் இருந்து அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற முடியாமல் போகும்.

- பழசாறுகளில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருக்கும். அதுவும் குறிப்பாக பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்டால்.

எது சிறந்தது?

ஸ்மூத்திகள் மற்றும் ஜூஸ்கள் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக ஸ்மூத்தி தான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் இவற்றிலிருந்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகளை முழுமையாக பெற முடியும். ஒருவேளை உங்களுக்கு ஜூஸ் குடிக்க விரும்பினால் சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் நாச்சத்து நிறைந்த உணவுகளுடன் அவற்றை நினைத்துக் கொள்ளுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்
வெற்றியை தடை செய்யும் 6 பழக்கங்கள் - சாணக்கியர்