Jowar Roti : கர்நாடகா ஸ்பெஷல் சோளம் ரொட்டி!! சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்.. ரெசிபி இதோ

Published : Jul 12, 2025, 04:54 PM IST
benefits of eating Jowar Roti

சுருக்கம்

கர்நாடகா ஸ்பெஷல் சோளம் ரொட்டி செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கர்நாடகாவின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றுதான் ஜோவர் (சோளம்) ரொட்டி (jowar roti). இது சத்தானது மற்றும் ஆரோக்கியமானது இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு இந்த ரொட்டி மிகவும் நல்லது. மேலும் இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. இப்படி பல நன்மைகள் நிறைந்துள்ள இந்த ரொட்டியை இனி உங்களுக்கு வீட்டில் சப்பாத்திக்கு பதிலாக செய்து சாப்பிடுங்கள். பலன்கள் ஏராளம் கிடைக்கும். சரி இப்போது சோளம் ரொட்டி செய்வது எப்படி என்றும், அதன் நன்மைகள் என்னென்ன என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சோளம் ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் :

சோள மாவு - 1 கப் 

தண்ணீர் - 1 கப் 

நெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

சோளம் ரொட்டி செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிறிய உப்பு சேர்த்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது மாவை கொதிக்க நீரில் போட்டு கரண்டியால் கிளறி விடுங்கள். பிறகு பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அடுத்ததாக மாவை சுமார் ஐந்து நிமிடம் கைகளால் நன்கு பிசைய வேண்டும். மாவு பிசுபிசுப்பாக இருந்தால் மீண்டும் சோள மாவு சேத்துக் கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள். இல்லையெனில் காற்றுப்பட்டு மாவு உலர்ந்துவிடும். சிறிது நேரம் கழித்து, மாவை சம அளவில் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொன்றாக உள்ளங்கையில் தட்டி சப்பாதி போல மெல்லியதால போடவும். பின் சப்பாத்தி கல் அல்லது தோசை கல்லில் போடவும். முக்கியமாக ரொட்டி மீது ஈரமான துணியால் ஒத்தி எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தோசை மாவு சீக்கிரமாக வேகும். ரொட்டியை இரண்டு பக்கமும் புரட்டி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். பிற்கு நெய் அதன் மீது தடவ வேண்டும். இப்போது சுவையான மற்றும் சத்தான சோள ரொட்டி தயார்.

(குறிப்பு : எந்த கப்பில் தண்ணீர் எடுக்கிறீர்களோ அதே கப்பில் தான் மாவு எடுக்க வேண்டும்.)

சோளம் ரொட்டி ஆரோக்கிய நன்மைகள் :

1. மலச்சிக்கலை தடுக்கும் 

சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கும் நல்லது.

2. எடையை குறைக்க உதவும் 

சோளம் ரொட்டியில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளன எனவே முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

3. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது 

சோள ரொட்டியானது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல உணவாக அமையும்.

4. இதயத்திற்கு நல்லது 

சோழ ரொட்டியில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், அவை இது ஆரோக்கியத்தை மேம்படுத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

5. ரத்த சோகைக்கு நல்லது 

சோள ரொட்டியில் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளதால், இது ரத்த சோகை பிரச்சனையை போக்கும்.

6. தசைகளை வலுவாக்கும் 

சோள ரொட்டியில் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிகமாக உள்ளதால், இது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

7. சீரான நரம்பு செயல்பாட்டிற்கு உதவும் 

சோள ரொட்டியில் வைட்டமின் பி உள்ளதால், இது நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும்.

8. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது 

சோள ரொட்டியில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் அவை உடலும் உள்ள கால்சியம் அளவை பராமரிக்கும்.

9. ஆற்றலை அதிகரிக்கும் 

சோளத்தில் இருக்கும் வைட்டமின் பி3 உடலில் சக்தியை அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

10. வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்துள்ளன 

வைட்டமின் பி சத்துக்கள் சோள மாவில் நிறைந்துள்ளன. அது உடலில் புதிய திசுக்கள் திசுக்களை உருவாக்கவும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பர சத்துக்கள் வழங்ககும். கூடுதலாக, இதில் 20 ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு காணப்படுகின்றன.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க