
குழந்தைகளுக்கு முதல் நண்பர்களே அவர்களுடைய பெற்றோர்தான். அப்படியிருக்கும் போது திடீரென குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகுவதும், அவர்கள் தொடுதலை நிராகரிப்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். குழந்தைகள் ஒரே நாளில் இது போல மாறுவதில்லை. பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே உணர்ச்சி ரீதியாக ஒரு வெற்றிடம் உருவாவதற்கு என்ன காரணம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
பெற்றோரிடம் விலகும் குழந்தைகள்
குழந்தைகள் பெற்றோர் சொல்வதை கண்டுகொள்ளாமல், அவர் பேசும்போது அலட்சியமாக இருப்பது பெற்றோரை மிகவும் வருந்தச் செய்யும். இதை மோசமான நடத்தையாக பெற்றோர் கருதுகின்றனர். தங்கள் பேச்சை குழந்தைகள் கேட்கவில்லை; கீழ்படியவில்லை என சில பெற்றோர் புரிந்து கொள்கிறார்கள். இதை தங்களுடைய பெற்றோரை காயப்படுத்த வேண்டும் என்று எந்த குழந்தையும் செய்வது கிடையாது. இதற்கு முன்னர் தாங்கள் பேசியதை பெற்றோர் கேட்காமல் அல்லது தவறாக புரிந்து கொண்டதாக குழந்தைகள் உணர்வதாலேயே உணர்வுரீதியாக பெற்றோரிடமிருந்து விலகி செல்கிறார்கள். இதை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
கவன ஈர்ப்பு
குழந்தைகள் தங்களுடைய பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கீழ்படியாமல் அல்லது திமிராக நடந்து கொள்வதாக சில பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகள் பெற்றோரிடம் விலகி இருப்பது தங்களை தற்காத்துக் கொள்ளும் மனநிலை தான். ஒருவேளை உங்களுடைய குழந்தை உங்களிடம் உணர்ச்சிரீதியாக நெருக்கமாக இல்லை என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு மாறினார்கள் என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மனக் கண்ணாடி
குழந்தைகளுக்கு தாங்கள் நினைக்கும் உணர்வை சரியாக வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியாது. இதன் காரணமாகவே பெற்றோர் சில விஷயங்களை சொல்லும் போதும் கேட்கும்போதும் அவர்கள் கோபமாக நடந்து கொள்கிறார்கள். உங்களுடைய குழந்தை கோபப்பட்டதற்காக அவர்கள் மீது நீங்கள் திரும்ப கோபப்படுவதற்கு பதிலாக அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவர்களுடைய ஆளுமையிலும், நடத்தையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அமைதி! அமைதி!
எல்லா நேரங்களிலும் அதிகமான வார்த்தைகளால் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய உரையாடலுக்கு நடுவே சிறு இடைவெளி விட்டு மௌனமாக குழந்தைகளுக்கு அருகில் அமர்ந்திருப்பது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிக்கும். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் மனநிலையில் இருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும்.
நியாபகம்
பொதுவாக குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லும் வார்த்தைகளை விட உங்களிடம் அவர்கள் உணர்ந்த உணர்வுகள் தான் அதிகம் ஞாபகத்தில் இருக்கும். உதாரணமாக, பரீட்சையில் குறைவான மதிப்பெண் எடுத்த குழந்தையை அதை சொல்லி சொல்லி குத்திக் காட்டுவது மிகவும் வேதனையடைய செய்யும். அவர்கள் அழும்போது, "சும்மா நடிக்காத; காரணம் இல்லாமல் அழாத" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும். இந்த வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தும் போது அவர்கள் புரிந்து கொள்ளப்படவில்லை என்று நினைப்பார்கள். தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினாலும் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என குழந்தைகள் மனதில் தோன்ற ஆரம்பிக்கும்.
அக்கறையற்ற மனநிலை
தாங்கள் சொல்வதை பெற்றோர் நம்புவதில்லை தங்களை புரிந்து கொள்ளவில்லை என குழந்தைகள் நினைக்கத் தொடங்கும்போதுதான் பெரும்பாலும் அவர்கள் எதன் மீதும் ஈடுபாடு இல்லாதவர்களாக அக்கறையற்றவர்களாக மாறுகிறார்கள் நாளடைவில் தாங்கள் பெற்றோருக்கு சுமையாக இருப்பதாகவும் நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள் இதன் பின்னணியில் குடும்பத்தில் நிலவும் சண்டைகள் போதுமான உரையாடல்களின்மை போன்றவை காரணமாக இருக்க வாய்ப்புள்ளது இது தவிர வீட்டிற்கு வெளியே குழந்தைகள் பலரும் பலரும் நபர்கள் கூட அவர்கள் மதிப்பெற்றவர்களாக உணர வைத்திருக்கலாம். இந்த விஷயங்களை சரி செய்யும் போது குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளுக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள் இது அவர்களுடைய ஆளுமையை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பெற்றோரின் கடமை
பெற்றோர் தங்களுடைய குழந்தையின் உரையாடல்களை கேட்க தவறும்போது அவருடைய ஆளுமையில் சிறு வயதில் இருந்தே சில மாற்றங்கள் ஏற்பட தொடங்குகிறது. குழந்தைகளை ஆரோக்கியமான சூழ்நிலையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். விட்டேத்தியான மனநிலையில், எதன் மீதும் அக்கறையற்று எதைக் குறித்தும் கவலை கொள்ளாத குழந்தைகள் இந்த மாதிரியான சூழலை சந்தித்தவர்கள் தான். இந்த மனநிலையை மாற்ற பெற்றோர் அவர்களிடம் உணர்ச்சிப் பிணப்பை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
என்ன செய்யலாம்?
குழந்தைகளுடன் சேர்ந்து பழைய புகைப்படங்களை பார்ப்பது, அவர்களுடைய குழந்தை பருவத்தை குறித்து பேசுவது போன்றவை பிணைப்பை ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும். ஒரே நாளில் இதன் மாற்றங்கள் தெரியாது. ஆனாகும் தொடர்ந்து பெற்றோர் குழந்தையின் மீது அக்கறையாக இருப்பதை வெளிப்படுத்துவது அவர்களுடைய ஆளுமையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.