
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவவதுமே, கட்டிடம் கட்டுவது என்பது பெரும்பாலும் ஆண்களின் வேலையாகவே பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவில் கட்டுமானத் தளங்களில் பெண்கள் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் கொத்தனார்களுக்கு செங்கற்களை எடுத்துச் செல்வது, கலவை தயாரிப்பது மற்றும் கொத்தனார்களின் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றுவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.
ஆனால் பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள பெண்கள் இந்த ஆண் கோட்டைக்குள் நுழைந்து, பெண் கொத்தனார்களாக மாறி ஆண்களுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். ஆம்.. உலக வங்கியின் அறிக்கையின்படி, ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டுவதை ஊக்குவிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் கீழ் இந்த பெண்கள் முதல் முறையாக வீடு கட்டும் வேலைகளை எடுத்தனர்.
இதுவரை, ஜார்க்கண்டில் 50,000 க்கும் மேற்பட்ட திறமையான பெண் கொத்தனார்கள் அம்மாநிலத்தை திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுவிக்கும் பிரச்சாரத்தில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
Watch : தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்களை காலில் விழ வைத்த பாஜக அமைச்சர்!
அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 36 வயதான நிஷாத் ஜஹான் தற்போது பெண் கொத்தனாராக மாறி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.. சமீபத்தில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள சில்பார் குர்த் கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள், நிஷாத் ஜஹானின் கட்டிடம் கட்டும் வேகத்தை கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர் ஒரே நாளில் அவர் 4 கழிவறை சுவர்களை கட்டி உள்ளார்..
நிஷாத் ஜஹானும் அவரது தோழி உஷா ராணியும் இந்த குறிப்பிட்ட கிராமத்தில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெண்கள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன் படி ஜார்கண்ட் மாநிலத்தில் கட்டுமான பணிக்காக 50,000 பெண்கள் கொத்தனார் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நிஷாத் ஜஹானும் ஒருவர்.
40 வயதான ஊர்மிளா தேவி, நிஷாத் மற்றும் உஷா வேலை செய்யும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள சாலையோர தாபா ஒன்றின் அருகே கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஊர்மிளா தேவி இதுவரை 1,000க்கும் மேற்பட்ட கழிவறைகளை கட்டியுள்ளதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. பீகாரில் உள்ள சம்பாரண் நகருக்கு கழிவறை கட்டும் வேலைக்காக ஊர்மிளா சென்றார். மற்றொரு கொத்தனாரான பூனம் தேவி இதுவரை 900 கழிப்பறைகளை கட்டியுள்ளார்.
ஸ்வச் பாரத் அபியானை திட்டத்தை செயல்படுத்த உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியைப் பெற்ற மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். இந்த தொழில்நுட்ப உதவியின் ஒரு பகுதியாக, கழிவறை கட்ட கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிகழ்ச்சிகளை உலக வங்கி நடத்தியது, அதில் பல திட்டங்களில் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும், ஆரம்பத்தில், இந்த திட்டத்திற்கு அந்த கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் தயக்கம் காட்டினர். பல குடும்பங்கள் தங்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும், ஆண்கள் செய்ய வேண்டியதை பெண்கள் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கொத்தனராக மாறிய பிறகு, அவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது.. இந்தப் பெண்களின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. தடைகளை தகர்த்து வரும் ஜார்கண்ட் பெண்கள்.. கட்டுமான பணிகளில் ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் 50,000 பெண் கொத்தனார்கள்.
பிரபாஸ் முதல் தேஜஸ் வரை; நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் பெயர்கள் மாற்றம்!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.