தெரியாமல் கூட இதை செய்யாதிங்க.... வீடு தேடி வரும் வறுமை..!

By Kalai Selvi  |  First Published Apr 20, 2023, 6:40 PM IST

நெருப்பில் முடி கருகக் கூடாது என்று சொல்லுகிறார்கள் ஏன் தெரியுமா?. இது குறித்து இங்கே காணலாம்.


நெருப்பில் முடி கருகக் கூடாது என்று கூறுவார்கள். அதுவும் வீட்டினுள் வெட்டுப்பட்ட அல்லது உதிர்ந்த முடி எரிந்தால் அப்போதே மகா தரித்திரம் பிடிக்கும்.

நம் உடம்பில் உள்ள கை மற்றும் தலை முடி போல, பறவைகள் மிருகங்கள் முடியானது வெட்ட வெட்ட வளரக்கூடியது.அதில் இரத்தம் உண்டு. கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அது நெருப்பில் பொசுங்கும் போது ஏற்படும் வாடை அதற்கு சாட்சி. அந்த வாடை லட்சுமி தேவிக்கு ஏற்றதல்ல.

Tap to resize

Latest Videos

சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக் கூடாது என்பார்கள். தீய்ந்த கடாயில் சமைக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது, அவ்வாறு செய்தால் உடனே தரித்திரம் பிடிக்கும்.இவைகள் எல்லாம் மறுக்க முடியாத உண்மையே.

ஏழைகளுக்கு இயல்பாகவே நெருப்பில் முடி கருகுதல் மற்றும் கடாய் தீர்ந்து போகுதல் போன்ற சூழல் நடக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாகவே இருக்கிறார்கள்.

தெரிந்தோ தெரியாமலோ நம் கையில் உள்ள முடியில் தீப்பட்டால் உடனே அவ்விடத்தில் மஞ்சள் தூள் பூச வேண்டும். அப்போதுதான் ச
தரித்திரம் பிடிக்காது. ஏனெனில் எந்த ஒரு தரித்திர திட்டிற்கு மஞ்சள் சிறந்த தீர்வாகும். மேலும் மஞ்சளை கருகல் மூலம் ஏற்படும் தோஷம் நீங்க பூசப்படுகிறது என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

கொசுவை கூட நாம் எலக்ட்ரானிக் பேக் கொண்டு கொள்கிறோம்.  இதனால் அது திய்ந்து போகிறது. இதனால் வீட்டில் செல்வம் குறையும் என்று சாஸ்திரிகள் கூறுகின்றன.

யாகம் வளர்க்கும் போது கூட யாகத்தீயில் முடியை பூச்சிகளோ, விழுந்து தீர்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை. இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் வாடை லக்ஷ்மி கடாசரத்தை விளக்கி விடும் என்பர்.

இறந்த ஒருவரை எரிக்கும் போது கூட வாடை வரும். அதனால் தான் பிணத்தை எரித்த உடனே வீட்டிற்கு சென்று குளிக்கிறார்கள். பிணத்தை எரிக்கும் போது அதன் வாடையும் முகர்ந்தவர் யாரனாலும் 16 நாள் தொடர்ந்து தலையுடன் குளித்து வரவேண்டும். இல்லையேல் தரித்தரம் தான் பிடிக்கும். எனவே கவனமாக இருக்கவும்.

click me!