
வீட்டில் விளக்கு வைத்து வழிபடுவது இந்து மதத்தில் ஒரு முக்கிய வழிபாடாகும். குளித்த பின்னரே விளக்கு ஏற்றுவது மிக நல்லது. முக்கியமாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது குளிக்க கூடாது.
உடைந்த விளக்கை கொண்டு விளக்கு ஏற்ற கூடாது. ஒருவேளை உடைந்து விளக்கிக் கொண்டு விளக்கு ஏற்றினால் அது குடும்பத்தில் உள்ள சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், தெய்வத்தின் அருள் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது.
மண் விளக்கில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அவ்வாறு ஏற்றினால் ஒரு முறை பயன்படுத்திய விளக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். உலோக விளக்கை கொண்டு விளக்கு ஏற்றினால் விளக்கேற்றுவதற்கு முன்னர் அதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாமல் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு தீங்கு வரும்.
விளக்கு ஏற்றும் போது ஒரு விளக்கிலிருந்து மற்றொரு விளகை ஏற்றக்கூடாது. மேலும் சரியான திசையில் விளக்கை ஏற்ற வேண்டும்.
இதையும் படிங்க: கோடை காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?...விடை இதோ!
விளக்கை காலை 5 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7:00 மணி வரையும் ஏற்றினால் நல்ல பலன் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
விளக்கு வைத்த பிறகு கடனாக பணத்தை வாங்குவது அல்லது பிறருக்கு கடன் கொடுப்பது, இது போன்றவற்றை நாம் தவித்தால் நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.