ஏப்.27 குரு உதயம்: எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? சிறப்பு பலன்களைப் பெறும் ராசிகள் எவை?

By Narendran S  |  First Published Apr 18, 2023, 11:26 PM IST

குரு உதயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரவுள்ளது என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 


ஜோதிடத்தின்படி, வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி குரு மேஷ ராசியில் உதயமாகுகிறார். இதன் தாக்கமாக பல ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவர். மேலும் பலரது வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அவ்வாறு இந்த குரு உதயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரவுள்ளது என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். 

மேஷ ராசி: 

Tap to resize

Latest Videos

மேஷ ராசிக்காரர்கள், குருவின் உதயத்தால் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். தொழிலில் பல வெற்றிகள் கிடைக்கும். இதுமட்டுமின்றி, உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் நல்ல உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களுக்கும் இந்த நேரம் நல்ல பலனைத் தரும்.

கடக ராசி: 

மேஷ ராசியில் குரு உதயம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில், குருவின் உதயத்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இதன் போது, வேலை செய்பவர்களும் பல நன்மைகளைப் பெறலாம். சம்பளம் உயரும் பெறலாம்.

இதையும் படிங்க: சூரிய கிரகணம் 2023: இதனால் 7 ராசிக்காரர்களுக்கு தோஷம்!! அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சிம்ம ராசி: 

சிம்ம ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அசாத்திய லாபத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் மற்றும் கூட்டாண்மையில் புதிய வேலையைத் தொடங்கலாம். சமூகத்தில் மரியாதை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல வகையான சலுகைகளைப் பெறுவார்கள். சம்பளம் உயரும். இதுமட்டுமின்றி இடமாற்றம், பணி மாறுதல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி: 

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் புரிதலின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். வியாபாரிகளுக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

இதையும் படிங்க: சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம்! கண்டிப்பாக கர்ப்பிணிகள் தேங்காய் வைத்து கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

மகர ராசி: 

மகர ராசிக்காரர்களுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீட்டிற்கு மாறலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும், பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம்.

மீன ராசி: 

மேஷ ராசியில் குரு உதயத்தால், மீன ராசிக்காரர்களும் சுப பலன்களைப் பெறுவார்கள். இதன் போது இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். பயணத்தின் போது பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

click me!