Winter Special Tea : குளிர்க்காலத்துல இப்படி 'டீ' போட்டா சுவையோட 'நோய் எதிர்ப்பு சக்தியும்' அதிகரிக்கும்..

Published : Dec 08, 2025, 06:04 PM IST
Jaggery Masala Tea

சுருக்கம்

குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த ஒரு டீய குடியுங்கள். அதை எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்க்கலாம்.

தற்போது குளிர் காலம் என்பதால் இந்த சீசனில் உடலை ஆரோக்கியமாக வைப்பது ரொம்பவே முக்கியம். ஏனெனில் இந்த பருவத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வரும். இருப்பினும் குளிர்காலத்தில் 'வெல்லம் மசாலா டீ' குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும். இப்போது இந்த பதிவில் இந்த வெல்லம் மசாலா டீயை தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

வெல்லம் மசாலா டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

வெல்லம் - தேவையான அளவு (பொடித்தது) 

பட்டை - 1 துண்டு (சின்னது) 

கிராம்பு - 2 

ஏலக்காய் - 2-3 

நறுக்கி இஞ்சி - 1/2 துண்டு 

தேயிலை தூள் - 1 ஸ்பூன் 

பால் - 1/2 கப் 

தண்ணீர் - 1 கப்

வெல்லம் மசாலா டீ செய்முறை :

இந்த டீ தயாரிப்பதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், நறுக்கி இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு தேயிலை தூள் சேர்த்து சுமார் 1-2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு பால் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும். இப்போது அதை வடிகட்டி அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் சுவையான வெல்லம் மசாலா டீ தயார்.

வெல்லம் மசாலா டீ ஆரோக்கிய நன்மைகள் :

- வெல்லம் இயற்கையான சர்க்கரை என்பதால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

- இஞ்சி, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

- உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற இந்த டீ உதவுகிறது.

- இந்த மசாலா பொருட்களின் கலவையானது வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

- சளி, இருமலுக்கு இஞ்சி சிறந்த நிவாரணம் அளிக்கும்.

- சர்க்கரைக்கு பதிலாக வெள்ளத்தை பயன்படுத்துவது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்