பெண்கள் பிறப்புறுப்பில் பவுடர் பயன்படுத்துவது நல்லதா? பாதுகாப்பானதா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

By Asianet Tamil  |  First Published Sep 22, 2023, 11:34 PM IST

பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை சுத்தப்படுத்தும்போது, அதற்கென்று பிரத்தேயகமாக உள்ள பவுடர்களை பயன்படுத்துவது ஒரு சுகாதாரப் பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால் பிறப்புறுப்பில் பவுடர்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இந்த பதிவில் காணலாம்.


பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க நல்வாழ்வில் சுகாதாரம் ஒரு முக்கிய அம்சமாகும். இது தொற்று, அசௌகரியம் மற்றும் பிற பிறப்புறுப்பு பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. இருப்பினும், உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம் சரியான அளவில் இல்லாவிட்டால், அரிப்பு, சிவத்தல், ஒழுங்கற்ற வெளியேற்றம், விரும்பத்தகாத துர்நாற்றம் , எரியும் உணர்வு, மற்றும் பல அசௌகரியங்களை நீங்கள் அனுபவிக்ககூடும்.

இதனை அடுத்து தற்போது சந்தையில் பெண்களுக்கு என்றே பிரத்தியேகமாக, அவர்களுடைய பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய பல வகையான பவுடர்கள் போன்ற பல தயாரிப்புகள் வந்துள்ளன. ஆனால் அந்த பவுடர்பயன்படுத்துவது பாதுகாப்பானதா? பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தப்படும் வகையில் தான்  அந்த பவுடர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் அதில் டால்க், சோள மாவு அல்லது பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் உள்ளன. எனவே, அவை தொற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது.

Tap to resize

Latest Videos

"லிப்ஸ்டிக்" யூஸ் பண்றீங்களா ப்ளீஸ் நோட் பண்ணிக்கோங்க...இது அழகு மட்டுமல்ல, நோயும் கூட..!!

ஆனால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் பிறப்புறுப்புகளில் பவுடரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி ஆராய்ந்துள்ளன. புற்றுநோய்க்கான அமெரிக்க சங்கத்தின் 2011 ஆண்டு கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆராய்ச்சியின் படி, பிறப்புறுப்பு பொடிகளைப் பயன்படுத்துவது, குறிப்பாக டால்க் கொண்டவை, தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. நீங்கள் அவற்றை அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தினால், கருப்பை புற்றுநோயின் அபாயத்தை சுமார் 30 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆகவே பெரிய அளவில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, ஆனால் சந்தையில் டால்க் இல்லாத, உண்மையில் பிறப்புறுப்புக்கு பாதிப்பு ஏற்படுத்ததாக பவுடர்களும் உள்ளது, அவற்றை தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்தலாம். 

இந்த தவறான செயல்களால் உங்கள் உறவு மோசமடையலாம்... கவனமா இருங்க தம்பதிகளே..

click me!