மொபைல் போனுக்கு அடிமையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை
தற்போது இருக்கும் காலகட்டத்தில் அசுர வளர்ச்சியில் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கு பெரியோர் வரை காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு செல்கின்றன.
வீட்டுக்கு ஒரு போன் என்ற காலம் கடந்து இப்போது மொபைல் இல்லாத கையே பார்க்க முடியாது. அனைவரது கையிலும் மொபைல் போன் தான். அதுவும் இந்த காலக் குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் அவர்களுக்கு இந்த உலகமே தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு அதில் மூழ்கி போயிருப்பார்கள். அவர்களின் இந்த மாற்றத்திற்கு தொழில்நுட்பம் தான் காரணம் என்று நாம் சொல்லிட முடியாது. பெற்றோர்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு, உடை, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்கள் மீது அன்பு அக்கறையுடன் இருப்பது இவை அனைத்து அவர்களின் அடிப்படை தேவையை நீங்கள் பூர்த்தி செய்வதாகும்.
இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் குழந்தை கவலையாக இருந்தால் அசால்டாக இருக்காதீங்க..இப்படி சந்தோஷப்படுத்துங்க..!!
பிள்ளைகளுக்கு இப்படி சொல்லி கொடுங்க:
உங்கள் குழந்தை உங்களிடம் ஏதாவது ஒன்று அடம் பிடித்து கேட்டால் அவற்றை நீங்கள் வாங்கிக் கொடுக்கிறீர்கள் ஆனால் இது சரியான வளர்ப்பு அல்ல நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருள் அவர்களுக்கு உபயோகப்படுமா என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின் பணத்தின் மதிப்பை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இவையே நல்ல வளர்ப்பு முறையாகும். குறிப்பாக நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவது உங்களது கடமை ஆகும்.
சில குழந்தைகள் ரொம்பவே அடம்பிடிப்பார்கள், பெரியவர்களை மதிக்க மாட்டார்கள். அந்த சமயத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல்லப் போனால் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு செல்லம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: பெற்றோர்களின் கவனத்திற்கு: உங்கள் குழந்தைக்கு 'பரீட்சை' பயம் இருந்தால் இப்படி அவங்களை ட்ரீட் பண்ணுங்க..!!
உங்கள் குழந்தை மொபைல் போனுக்கு அடிமையா?
உங்கள் குழந்தை மொபைல் போனுக்கு அடிமையாக இருந்தால் அவற்றினால் ஏற்படும் ஆபத்தை குறித்து முதலில் அவர்களிடம் சொல்லுங்கள். குழந்தைகள் மொபைல் போனில் கேம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் அவர்கள் உடலில் பலவித பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. உதாரணமாக உடல் எடை அதிகரிப்பு, மன உளைச்சல், கேட்கும் திறன் குறைதல், கண் பார்வை மங்குதல் போன்றவை ஆகும்.