உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் சில அறிகுறிகள், அதாவது பாலியல் இன்பத்திற்குப் உங்களின் தென்படும் சில அறிகுறிகளை நீங்கள் கவனிக்காமல்விட்டால் கடுமையான பிரச்சினைகளுக்கு அது வழிவகுக்கும். சரி உங்கள் ஆரோக்கியத்தைப் அந்த அறிகுறிகள் சொல்வதென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
தலைவலி
பொதுவாக உடலுறவுக்குப் பிறகு தலைவலி ஏற்படுவது இயல்பானது தான், ஆனால் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு அவர்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தேசிய தலைவலி அறக்கட்டளையின் கூற்றுப்படி, உடலுறவின் போது உடல் உற்சாகமாக இருக்கும்போது, தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் சுருங்குவதற்கு காரணமாகிறது, இது தலைவலியைத் தூண்டுகிறது. ஆகையால் அடிக்கடி உடலுறவின்போது தலைவலி ஏற்பட்டால் அதை சற்று ஒதுக்கி வைப்பது நல்லது.
ஆஸ்துமா
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அது சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உடலுறவின் போது அதிகமாகலாம். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உடலுறவின் போது மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், இருமல், தும்மல் போன்றவை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியமான உறவை உருவாக்க இவை தான் ரொம்ப முக்கியம்.. தம்பதிகளே ட்ரை பண்ணி பாருங்க..
உடலுறவின் போது ஆஸ்துமா தூண்டுதல்களைத் தடுக்க உங்கள் மருந்துகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தவிர, கவலை மற்றும் மனச்சோர்வைத் தூண்டும் சூழ்நிலைகளிலிருந்து முடிந்தவரை உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் இன்ஹேலரை அருகில் வைத்திருப்பது நல்லது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTI என்பார்கள்)
உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்பில் எரியும் உணர்வு, வலி அல்லது அரிப்பை உணர்கிறீர்களா? உடலுறவுக்குப் பிறகு ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உங்களுக்கு UTIஐ இருக்க வாய்ப்பு உள்ளது. உடலுறவுக்குப் பிறகு சரியான சுகாதாரத்தைப் புறக்கணிப்பது UTIஐ பெற வழிவகுக்கிறது.
காய்ச்சல், உடல் வலி மற்றும் குளிர் போன்ற பிற அறிகுறிகளுடன் உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்பில் அசாதாரணமான அசௌகரியத்தை அனுபவித்திருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் UTI எனப்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றோடு உடலுறவு கொள்ள முயற்சித்தால், அது உங்கள் உடல் நலனை மேலும் மோசமாக்கும் மற்றும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஆண்மக்களே.. தப்பிதவறிக் கூட "இந்த" உணவுகளை சாப்பிடாதீங்க..விந்தணு எண்ணிக்கை குறையும்..!!