Mosquito repellent: குளிர்காலத்தில் கொசு ரொம்ப கடிக்குதா...? கொசு கடிக்கு விடுதலை தரும் ஸ்மார்ட் கொசுவிரட்டி.!

Published : Mar 03, 2022, 07:48 AM ISTUpdated : Mar 03, 2022, 11:21 AM IST
Mosquito repellent: குளிர்காலத்தில் கொசு ரொம்ப கடிக்குதா...? கொசு கடிக்கு விடுதலை தரும் ஸ்மார்ட் கொசுவிரட்டி.!

சுருக்கம்

Mosquito repellent: கொசுக்கடி என்பது உலகளவில் இருக்கும் பிரச்சனையாகும். இதற்கு, தீர்வு என்பது முடியாத ஒன்றாக சென்று கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொசுக்களை விரட்ட  ஸ்மார்ட் கொசு விரட்டி வந்திருக்கிறது.

கொசுக்கடி என்பது உலகளவில் இருக்கும் பிரச்சனையாகும். இதற்கு, தீர்வு என்பது முடியாத ஒன்றாக சென்று கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கொசுக்களை விரட்ட  ஸ்மார்ட் கொசு விரட்டி வந்திருக்கிறது.

கொசுக்கடி என்பது உலகளவில் இருக்கும் பிரச்சனை. இந்தியாவில் மட்டுமே கொசுக்கடி இருப்பதாக கூட சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பணக்கார நாடுகளாக இருக்கும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொசுக்கள் உள்ளன. இந்த கொசுக்களால் பரவும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க பல்வேறு சாதனங்கள் மற்றும் ஸ்பிரேக்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அவற்றில் இருந்து சற்று வலிமை கூடுதலாக ஸ்மார்ட் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

வெப்பம் நிறைந்த காலகட்டங்களில் அதிக நேரம் வெளியில் செலவழிக்கிறோம். அதிக வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைப்பது வழக்கமாக உள்ளது. இதனால் நமது வீட்டிற்குள் கொசுக்கள் நுழைவது எளிதாகிறது. நம் ரத்தத்தை உறிஞ்சும் இந்த கொசுக்கள் தொலைதூரத்தில் இருந்தும் கூட நம் வீட்டுக்குள் பிரவேசித்து விடுகின்றன. மனித ரத்தம் கொசுக்களுக்கு ஒரு சிறந்த உணவு. ஆனால் இதனால் நமக்கும் அரிப்பு மற்றும் சிவந்த புடைப்புகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவது அவசியம்.

எனவே, லிவ் எனப் பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட் கொசுவிரட்டியை தெர்மாசெல் நிறுவனம் கண்டுபிடித்து சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் கொசு விரட்டியான இதனை அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த சாதனங்களைத் தவிர ஸ்மார்ட்போன்கள் மூலமும் இந்த ஸ்மார்ட் கொசுவிரட்டியை பயன்படுத்த முடியும். லிவ் பிளஸ் என்ற மொபைல் செயலியின் துணையுடன் லிவ்வை இயக்க முடியும். 

லிவ் ஸ்மார்ட் கொசுவிரட்டியில் இருக்கும் மருந்தை நாள்தோறும் 8 மணி நேரம் எனப் பயன்படுத்தினால் 12 வாரங்களுக்கும் குறையாமல் பயன்படுத்தலாம். மெட்டோஃபுளூதெரின் ரசாயனம் புகைபோல் வெளியாகி, 20 அடி தூரத்துக்கு கொசுக்களை அண்டவிடாமல் செய்யும். ஆனால், இந்த ஸ்மார்ட் கொசு விரட்டியின் விலை தான் தலையை கிறுகிறுக்க வைக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள ஒரு லிவ் ஸ்மார்ட் கொசுவிரட்டியின் விலை 52 ஆயிரம் ரூபாயாம். 

ஒருமுறை மருந்து தீர்ந்துவிட்டால் 6 மருந்துகளை உள்ளடக்கிய ஒரு பேக் 9100 ரூபாய்க்கு வாங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பணக்காரர்கள் மட்டுமே அந்த கொசு விரட்டியை வாங்கிப் பயன்படுத்த முடியும். 

மேலும் படிக்க....Morning healthy drinks: காலையில் வெறும் வயிற்றில்…இந்த மூன்று டீடாக்ஸ் பானங்களில் ஒன்றை குடிக்க மறக்காதீங்க!

மேலும் படிக்க....Sakshi Agarwal Hot: இடுப்பு தெரிய மெல்லிய சேலையில் சாக்ஷி அகர்வால் போட்ட குத்தாட்டம்...வைரல் வீடியோ..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்