International Women’s Day 2023: இந்தியாவின் டாப் 2 தொழில் முனைவோர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Raghupati R  |  First Published Mar 7, 2023, 1:52 PM IST

சர்வதேச மகளிர் தினத்தை தினத்தையொட்டி,  இந்தியாவின் டாப் 2 தொழில் முனைவோர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .பெண்களின் சாதனை மற்றும் வெற்றிகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை தினத்தையொட்டி,  இந்தியாவின் டாப் 2 தொழில் முனைவோர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி

பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி 24 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2019 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அவர் பெப்சிகோவை பிளவுபடுத்தும் திட்டத்தைத் தடுத்தார். கிட்டத்தட்ட விற்பனையை இரட்டிப்பாக்கினார்.

நூயி 2019 இல் அமேசான் குழுவில் உறுப்பினரானார். அவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தார். கடந்த 2006ல் அமெரிக்க வணிகத்தில் ஒரு சில பெண் தலைவர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு யேலில் எம்பிஏ பட்டம் பெற்றார். அவரது விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக 2007ல் பத்ம பூஷன் பெற்றார். இந்திரா நூயி உலகின் பணக்கார பெண்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!

 கிரண் மசூம்தார்

முதல் தலைமுறை இந்திய தொழிலதிபர் தான் கிரண் மஜும்தார் ஷா. இவர் 1978 இல், இந்தியாவின் பெங்களூரில், ஆசியாவின் மிகப்பெரிய இன்சுலின் உற்பத்தியாளரான பயோகான் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். அவர் பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். 

விஞ்ஞானம் மற்றும் வேதியியலின் முன்னேற்றத்திற்கான அவரது விதிவிலக்கான பங்களிப்புக்காக ஓத்மர் தங்கப் பதக்கம், 2011 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 50 வணிகப் பெண்களின் பைனான்சியல் டைம்ஸ் பட்டியலில் இடம், பல மதிப்புமிக்க விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 65வது இடம் பெற்றுள்ளார்.

மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம்.. பெண்களுக்காக ஏன் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

click me!