
திருமண வீட்டு பார்ட்டி பாடலுக்கு வெளியில் இருந்த ஜொமேடோ டெலிவரி பாய் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. புல்கிட் கோச்சார் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஒரு ஜொமேடோ டெலிவரி பாய் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெறும் வீட்டிற்கு வெளியே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த பாடல் அந்த திருமண வீட்டில் பார்ட்டியின் போது போடப்பட்டது. அந்த பாடலுக்கு வீட்டிற்கு வெளியே டெலிவரி பாய் நடனமாடுவதை காணலாம்.
இதையும் படிங்க: மதுபோதையில் விஷப் பாம்பை கையில் பிடித்து முத்தமிட்ட இளைஞர் பலி
திருமண விருந்தினர்கள் நடன தளத்தில் நடனமாடும்போது, டெலிவரி ஏஜென்ட் வெளியில் இருந்து நடனமாடுகிறார். இந்த வீடியொவை இணையத்தில் பகிர்ந்து இசைக்கும் நடனத்திற்கும் தடைகள் இல்லை என்று கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாரடைப்பு ஏற்பட்டு பள்ளி ஆசிரியர் மரணம்
அதில் ஒருவர், அந்த டெலிவரி பாயை இரவு உணவிற்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர், ஷோஸ்டாப்பர் தோ பாய் தா அதாவது நிகழ்ச்சியின் சிறப்பம்சமானார் டெலிவரி பாய் என்று குறிப்பிட்டிருந்தார். இதனிடையே திருமண வீட்டில் போடப்பட்ட பாடல் சப்னே மே மில்டி ஹை. இது 1998 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தில் இருந்து லதா மங்கேஷ்கர் மற்றும் சுரேஷ் வாட்கர் பாடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.