
காலங்கள் மாறினாலும், காதல் மாறுவதில்லை. காதல் என்பது காக்கா குருவிக்கிட்ட கூட இருக்கிறது. அப்படியிருக்கும் போது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் காதல் வருவதில் தப்பில்லை. ஆம், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தான் 75 வயது தாத்தா, 70 வயது பாட்டிக்கு காதலை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள்?
கோலாப்பூரில் உள்ள கோசர்வாத் என்ற இடத்திலுள்ளா ஜானகி முதியோர் இல்லத்தில் பாபுராவ் பட்டீல் என்ற 75 வயது தாத்தா வாழ்ந்து வந்தார். புனேவைச் சேர்ந்த அனுஷ்யா ஷிண்டேவும் இங்கு வந்து தங்கினார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இந்த முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வந்துள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஒரு சில போட்டிகளிலேயே காணாமல் போன இந்திய வீரர்கள்!
இது குறித்து பாபுராவ் பட்டீல் கூறியிருப்பதாவது: ஜானகி முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு நான் மிகவும் தனியாக உணர்ந்தேன். இப்போது அனுஷ்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். இதையடுத்து அனுஷ்யா ஷிண்டே கூறியிருப்பதாவது: பாபுராவ் என்னை காதலிப்பதாக சொன்னார். அவரது காதலுக்கு நான் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. 8 நாட்களுக்குப் பிறகு தான் என்னுடைய முடிவை நான் சொன்னேன். நான் எடுத்த முடிவு சரியானது என்று இப்போது உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
நோபால் எல்லாம் அப்புறம் தான்: 500 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
இதைத் தொடர்ந்து இந்த முதியோர் இல்லத்தை நடத்தும் பாபாசாஹேப் கூறியிருப்பதாவது: இருவரும் காதலிப்பதாக சொன்னவுடன், அவர்களிடம் பேசினோம். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதைத் தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அவர் கூறியுள்ளார். பாபுராவ் மற்றும் அனுஷ்யா திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால், காதலுக்கு வயதும் கிடையாது என்பதை இவர்கள் இருவரும் நிரூபித்துவிட்டார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.