
ஒளிந்து கொண்டு விளையடுவது அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. ஆனால், இம்முறை பீமா சிறுவன் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டதால் ஆட்டம் சற்று தடுமாறிவிட்டது. பீமா சிறுவனை காணவில்லை, அனைவருக்கும் பிடித்த பீமா சிறுவனை மக்கள் தேடி வருகின்றனர்.
பீமா ஷோரூமுக்கு வரும் அனைவருக்கும் பீமா சிறுவன் யாரென்று தெரியும். சில நேரங்களில் வழக்கமான வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகிறார். பீமாவின் வழக்கமான வாடிக்கையாளரான லட்சுமி மேனன் வீட்டிற்கு சென்றபோது பீமா சிறுவன் கடைசியாக காணப்பட்டார். அப்போது பீமா சிறுவனுக்கு தேநீர் கொடுத்து அவனுடன் சில ரீல்ஸ்களை எடுக்க லட்சுமி மேனன் தயாரானார். ஆனால், சில நிமிடங்களில் பீமா சிறுவன் மாயமானான். இந்த சிறிது நேரத்தில் என்ன நடந்தது என்று லட்சுமி மேனனும் அவள் மகள் தன்வியும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பீமா சிறுவன் மாயமானதாக பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போன மோதிரத்தை பீமா சிறுவன், கண்மணியிடம் சென்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மோதிரம் பீமாவில் வாங்கப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து தன் தாத்தாவிடம் விளக்கினாள் கண்மணி, பீமா சிறுவன் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், தாத்தா கண்மணிக்கு பீமாவின் வரலாறு மற்றும் மரபு குறித்து விளக்கினார்.
பீமா ஜூவல்லர்ஸ் ஆலப்புழா என்ற சிறிய நகரத்தில் வெள்ளிக்கடையாக தொடங்கப்பட்டது. உடுப்பியைச் சேர்ந்த குப்பண்ண பட்டருக்கும், அவரது மனைவி மகாலட்சுமிக்கும் 3வது மகனாக பிறந்தவர் லட்சுமி நாராயண். அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பம் பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டதால், லட்சுமி நாராயண் பசியிலிருந்து தப்பிக்க கெட்டி மோரில் சிறிது சாதம் கலந்து சாப்பிட்டு வந்தார். இதனால் பீமா என்ற பெயர் வந்தது. பிறகு மைத்துனருடன் ஆலப்பிக்கு வந்து அங்கேயே வளர்ந்தார்.
பீமா பட்டர் இளைஞனாக வளர்ந்திருந்த போது, வெள்ளி வியாபாரம் செய்ய ஆசை கொண்டார். அதற்காக, தன் மனைவியின் அழகிய கொலுசுகளை விற்று பெற்ற பணத்தில் வெள்ளிப் பாத்திரக்கடையை தொடங்கினார். பீமாவில் விற்கப்படும் பொருட்களின் அழகும் தூய்மையும் சிறிது காலத்திலேயே மிகவும் பிரலமடைந்தது. பீமா தரத்தில் சமரசம் செய்து கொள்ளாததாலும், அதன் தயாரிப்புகள் குறைந்தபட்ச லாபத்திற்கு விற்கப்பட்டதால் விரைவில் அவரது வணிகம் பெரும் வெற்றி பெற்றது. இது பீமா பாரம்பரியத்தின் தொடக்கமாக இருந்தது. அதன் பிறகு பீமா பிராண்ட் மிகவும் வெற்றிகரமாக மாறியது.
தொடர்ந்து, பீமா கேரளாவில் தங்க நகை வியாபாரத்தை தொடங்கினார். பீமா எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை தக்கவைத்துள்ளது. பீமாவை பொறுத்தவரை வணிகம் என்பது வெறும் பணப் பரிமாற்றம் அல்ல, மாறாக அது அன்பு மற்றும் நம்பிக்கையின் பரிமாற்றம், இது பீமா பட்டர் என்ற பிராண்டால் இன்னுமும் பின்பற்றப்படுகிறது. பீமா 97வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பீமா இப்போது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 55 ஷோரூம்களுடன் வளர்ந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் மனதில் அன்பால் பொறிக்கப்பட்ட பிராண்ட் பெயராக ''பீமா'' திகழ்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.