வெற்றிக்கான திறவுகோல் “யோகா“..! விளக்குகிறார் யோகக்கலை பிரபல  சிறப்பு பயிற்சியாளர் டாக்டர்.எஸ்.நடராஜன்

First Published Jun 15, 2017, 2:01 PM IST
Highlights
importance of yoga explained by dr.natraj


வெற்றிக்கான திறவுகோல் “யோகா"

சமீபத்தில்  மக்களிடேயே  நல்ல  விழிப்புணர்வை  ஏற்படுத்திய  ஒரு  கலை “யோகா “ என்றே சொல்லலாம்.யோகாவின்  பயன்பாடு  என்ன என்பதை  இன்று  உலகமே  உற்று நோக்கி, தங்கள்  வாழ்வில்  மேன்மையடைய  யோகா செய்கின்றனர்.

யோகா என்றால் என்ன?  நம் வாழ்கையில் யோகாவின்  முக்கியத்துவம் என்ன ? இது போன்ற பல கேள்விகளுக்கு  பதிலளித்துள்ளார் 2௦ வருடம் அனுபவம் வாய்ந்த யோகக்கலை பிரபல  சிறப்பு பயிற்சியாளர் டாக்டர்.எஸ்.நடராஜன்.இவர் விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம்   “BEST CREATIVE CHILD AWARD” பெற்றவர்.

யோகா ?

யோகா என்ற வார்த்தை “யுஜ்” என்ற  சமஸ்கிருத  மொழியிலிருந்து  வந்துள்ளது.யுஜ்  என்றால்,  நம்முடைய  உயிர் ஆற்றல்,  இறை ஆற்றலோடு எப்பொழுது இணைகிறதோ அப்பொழுது தான்  நமக்கு ஆற்றல்  அதிகரிக்கும்.

அதாவது  உடலையும்  உள்ளதையும்  நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி தான் யோகா

யோகா என்பது வெற்றிக்கான திறவுகோல்

வாழ்கையில்  வெற்றி  பெற மற்றும் முன்னேற  நமது  கண்ணோட்டம்( attitude) மிக  முக்கியமானது. வெற்றி பெறுவது என்பது வாழ்கையில்  அவ்வளவு  சுலபம் கிடையாது . அப்படிப்பட்ட வெற்றியை சுலபமாக அடைவதற்கு தேவையான மனதின் ஆற்றல், வலிமை  அடைவதற்கு  உறுதுணையாக இருப்பது  யோகா  என்றால் யாராலும் மறுக்க  முடியாது.

மனதின் ஆற்றல் எப்படி வலுப்பெறுகிறது ?

யோகாவின் ஒரு பகுதியான  பிராணயாமம் மற்றும் தியானம் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது.  இதனை  தினந்தோறும்  ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செய்து வந்தால்,  நம்மை  பல துன்பத்திற்கு  ஆளாக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட அனைத்தும் பறந்து  சென்று விடும். நம்  மனம்  எப்பொழுதும் அதிக ஆற்றலுடன் செயல்படும். நம் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன்  செயல்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது

தற்கொலையை  தடுக்கும்  யோகா ?

மன அழுத்தத்தின் காரணமாக உலக அளவில் குறைந்தது  ஒரு நாளைக்கு 3000  நபர்களாவது  தற்கொலை  செய்துக்கொள்கின்றனர். காரணம்  மன அழுத்தம், உடல்   பருமனால்  ஏற்படக்கூடிய  மாற்றங்கள், நீரிழிவு நோய்  உள்ளிட்ட  பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.இது போன்ற காரணங்களால்  ஏற்படக் கூடிய மன அழுத்தம் மற்றும் மீள முடியாத  மன மற்றும் உடல் வலி காரணமாக பலர்  இறகின்றனர். ஒரு சிலர்  மனதால் பாதிக்கப்பட்டு , வாழ்வில் எதிலும் வெற்றி  பெறாமல்  தங்களை தாங்களாகவே  மாய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் யோகாவால் வெற்றி  காண  முடியும் என்பது தான் உண்மை .

40 %  வருமானம்  மருத்துவமனையில் தான் செலவிடுகிறோம்

பல கட்ட  ஆராய்ச்சிற்கு பின்,பல்கலைக்கழகங்கள் , மருத்துவமனைகள் யோகா செய்வதன் மூலம் நம்  மனமும்  உடலும் ஆரோக்கியமாக  உள்ளது என  விஞ்ஞான பூர்வவமான  அறிக்கை  வெளியிட்டுள்ளது.

ஒளிமயமான  எதிர்காலத்திற்கு வரப்பிரசாதமாக  உள்ள  யோகா, பதஞ்சலி முனிவரால் இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஒரு ஒழுக்க நெறியாக கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது 

உலக யோகா தினம் ஜூன் 21

உலக  யோகா தினமாக  ஜூன் 21 ஆம்  தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது.இதனையொட்டி யோகாவின் உன்னதம் பற்றி 20 வருடம் அனுபவம்  வாய்ந்த யோகக்கலை பிரபல பயிற்சியாளர் டாக்டர்.எஸ்.நடராஜன் விளக்கி கூறும்  மேலும்  பல ஆசனங்கள், பிராணயமா,தியானம்  உள்ளிட்ட   அனைத்தையும்  ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம். யோகா  பயின்று  உடல் மற்றும் மன  நலத்துடன் வாழலாம் .

 

click me!