Ugadi 2023: உகாதியின் சிறப்பும் அதன் முக்கியத்துவமும்… தேதி, நேரத்தோடு விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

By Narendran SFirst Published Mar 21, 2023, 7:58 PM IST
Highlights

உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

உகாதி கொண்டாடப்படுவதன் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் புத்தாண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம் தான் இந்த யுகாதி பண்டிகை. இந்து சந்திர நாட்காட்டியின் மாதமான சைத்ராவின் முதல் நாள் இதுவாகும். இது மகாராஷ்டிராவில் குடி பட்வா என்றும், காஷ்மீரில் நவ்ரே என்றும், கொங்கனில் சன்வத்சர் பட்வோ என்றும், சிந்தி மக்கள் செட்டி சந்த் என்றும் கொண்டாடுகிறார்கள். மேலும் இந்த விழா கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உகாதியாக கொண்டாடப்படுகிறது. 

இதையும் படிங்க: Happy Ugadi 2023 Wishes: உகாதி பண்டிகையில் இந்த வாழ்த்துகளை அனுப்பி அசத்துங்கள்..!

உகாதி 2023 தேதி மற்றும் நேரம்:

உகாதி இந்த ஆண்டு (2023) மார்ச் 22 (நாளை) அன்று கொண்டாடப்படுகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, குடி பட்வா உயிரினங்களுக்கான பிரதிபத திதி மார்ச் 21 அன்று இரவு 10:52 மணிக்கும், பிரதிபத திதி மார்ச் 22 அன்று இரவு 8:20 மணிக்கும் முடிவடையும். ஒன்பது நாள் திருவிழாவான சைத்ரா நவராத்திரியின் தொடக்கத்தையும் இந்த நாள் குறிக்கும். துர்காவின் ஒன்பது அவதாரங்களையும் சைத்ரா நவராத்திரியின் போது வழிபடுவார்கள். மேலும் ஒன்பதாம் நாள் ராம நவமியாகவும் கொண்டாடப்படுகிறது.

பூஜை விதிகள்:

யுகாதி பண்டிகையின் போது காலையில் எழுந்து எண்ணெய் வைத்து குளியல் செய்து புதிய ஆடைகளை அணிவர். வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்துவார்கள். இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதோடு ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளையும் செய்வார்கள். பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இறைவனுக்கு பணியாரம், போளி, பால் பாயசம், புளியோதரை போன்ற உணவுகளை படைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இதையும் படிங்க: உகாதி பண்டிகை.. இதை மட்டுமே செய்தால் போதும்.. வறுமை நீங்கி வாழ்க்கை செழிப்பாக மாறும்..!

உணவைப் பொறுத்தவரை, பாரம்பரியமாக, உகாதி அன்று, மாம்பழம், புளி, வேப்பம்பூ, உப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு உகாதி பச்சடி தயாரிக்கப்படுகிறது. வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்கக்கூடிய இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற பல்வேறு நிகவுகளை உணர்த்துவதற்காக உருவாக்கப்படுவதுதான் இந்த உகாதி பச்சடி. உகாதி பண்டிகை காலங்களில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும்.

உகாதியின் சிறப்பும் முக்கியத்துவமும்: 

உகாதி என்பது தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டமாகும். உகாதி என்ற சொல்லுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று பொருள். யுக் அல்லது உக் என்றால் சகாப்தம். ஆதி என்பது புதிய ஆரம்பம். இந்த நாளில்தான் பிரம்மா பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இது புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குளிர்காலத்தின் முடிவையும் குறிக்கிறது. மக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் திருவிழாவைக் கொண்டாடுவார்கள். 

click me!