மைக்கேல் ஜாக்சன் போன்று நடனத்தில் அசத்தும் மிசோரம் இளைஞர்; வைரல் வீடியோ!!

Published : Mar 20, 2023, 04:03 PM ISTUpdated : Mar 20, 2023, 04:17 PM IST
மைக்கேல் ஜாக்சன் போன்று நடனத்தில் அசத்தும் மிசோரம் இளைஞர்; வைரல் வீடியோ!!

சுருக்கம்

உலகில் திறமைக்கு பஞ்சமில்லை. டிக் டாக், இன்ஸ்டா போன்ற சமூக ஊடகங்கள் வந்த பின்னர் மக்கள் தங்களது திறமையை வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.  

ரீல்களும் அதேபோல் வாய்ப்பை வழங்கி வருகிறது. மக்களின் இந்த திறமைகள் காலத்திற்கும் அழிக்கப்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோவை பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் பதிவிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சனின் பேய் வீடியோவை போன்று அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மிசோரமில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த இளைஞனுக்குள் மைக்கேல் ஜாக்சனின் ஆவி நுழைந்துவிட்டதோ என்று கேட்கும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது.  அந்த இளைஞனின் அற்புதமான நடனம் நம்மை கண் இமை இமைக்காமல் பார்க்க வைக்கிறது. நிஜத்திலும் மைக்கேல் ஜாக்சனின் ஆவிதான் புகுந்து விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

ஞாயிற்றுக்கிழமை இந்த வீடியோவைப் பகிர்ந்த வித்யுத் ஜம்வால், 'சண்டே என்டர்டெயின்மென்ட், இது மிசோரமைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி'' என்று பதிவிட்டுள்ளார். வைரலான வீடியோவில், மைக்கேல் ஜாக்சனின் இசைக்கு ஒருவர் பிரேக் டான்ஸ் ஸ்டெப்களைக் காட்டுகிறார். சமூக ஊடக பயனீட்டாளர்களை மிரள வைக்கிறார். அந்த நபரை மக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்