Lemon Seeds : இது தெரிந்தால் எலுமிச்சை விதைகளை தூக்கி எறிய மாட்டிங்க!

By Dinesh TGFirst Published Sep 29, 2022, 10:34 AM IST
Highlights

எலுமிச்சையில் அதன் சாறு மற்றும் தோலைக் கூட நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம். ஏனெனில், எலுமிச்சை விதைகளில் இருக்கும் அற்புதப் பயன்கள் பற்றி பலருக்கும் இங்கு தெரிவதில்லை. எலுமிச்சை விதைகளின் பயன்களை தெரிந்து கொண்டால், நிச்சயம் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள்.

எலுமிச்சை விதைகளின் பயன்கள்

எலுமிச்சை விதையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. வலியைக் குறைக்கச் செய்யும் பல்வேறு மருந்துகளின் முக்கிய கூறுகளில், இதுவும் ஒன்று. உடலில் எங்கேனும் வலி இருப்பின், அந்த சமயத்தில் நீங்கள் எலுமிச்சை விதைகளை பயன்படுத்திப் நிவாரணம் பெறலாம். எலுமிச்சை விதைகளை அரைத்து, பேஸ்ட் போல செய்து வலி இருக்கும் இடத்தில் தடவினால், உங்கள் வலி வெகு விரைவில் குணமாகும்.

நூற்புழுக்கள் ஒரு அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இருப்பினும், இவை பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் புழுக்கள் நூலைப் போல இருக்கும். இப்புழுக்கள் திறந்த மற்றும் மலக்குடல் பகுதியைப் பாதிக்கிறது. நூல்புழுவால் சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற, ஒரு கைப்பிடி அளவு எலுமிச்சை விதைகளை நசுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சூடான இந்த நீரைக் கொண்டு, நீங்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்யலாம். நீங்கள் விரும்பினால், இந்த தண்ணீரை உட்கொள்ளவும் செய்யலாம். ஏனெனில் இந்நீரில் நச்சுத்தன்மையை அகற்றும் பண்புகள் ஏராளமாக உள்ளது.

Samai Arisi Pongal : சுவையான மற்றும் சத்தான சாமை பொங்கல் ரெசிபி!

எலுமிச்சையின் சாறு, தோல் மற்றும் விதைகள் ஆகிய மூன்றும் நம் சருமத்திற்கு அதிக நன்மை பயக்க கூடியவை‌. எலுமிச்சை விதைகளுக்கு, நம்முடைய சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்கும் தன்மை உள்ளது. இதனுடன் எலுமிச்சை சாற்றில் உள்ளது போல, எலுமிச்சை விதையிலும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதனைக் கொண்டு சருமத்தை ஸ்க்ரப் செய்யலாம். எலுமிச்சை விதைகளை நசுக்கி, தேனில் கலந்து செய்யப்படும் ஃபேஸ் ஸ்க்ரப் உங்கள் முகத்திற்கு பொலிவை அளிக்க வல்லது. இதனை உடல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.

ஏதேனும் விரல் தொற்று பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், எலுமிச்சை விதை பேஸ்ட்டை தடவிப் பயனடையலாம். நல்ல பலன்களைப் பெற, இந்த பேஸ்டில் 2 சொட்டு தேயிலை மர (டீ ட்ரி) எசன்ஷியல் ஆயிலையும் கலக்கலாம்.

click me!