துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால் பரிசு.....கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!

By thenmozhi g  |  First Published Sep 3, 2018, 2:31 PM IST

பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதற்காக துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


இதற்கு முன்னதாக, பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் கூட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மண்பாண்டங்கள் பயன்படுத்த ஊக்கமளிக்கும் வகையில் அவர் புதிய மண்பாண்ட பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.

Tap to resize

Latest Videos


  இந்நிலையில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு பரிசு என குறிப்பிட்டு அதற்கான வாட்ஸ் அப் எண், ட்விட்டர், முகநூல் விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த முகவரிக்கு ஆர்வத்துடன் செல்பி எடுத்து அனுப்பும், மிக சிறந்த விழிப்புணர்வு புகைப்படம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு வழங்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து ஊள்ளார். அதன்படி பல்வேறு தரப்பினர் தற்போது பிளாஸ்டிக் இல்லா துணி பையுடன் செல்பி எடுத்து அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த அருமையான திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  

click me!