
ஆண்களுக்கு ஆபத்து...! அமாவாசையில் பிறந்த தை...! "இதனை" செய்ய வேண்டுமாம்...!
ஐதீகம் பல உண்டு....முன்னோர்களின் பழக்க வழக்கங்களுக்கு மூட நம்பிக்கை என பலரும் தெரிவித்து வரும் இன்றைய கால கட்டத்தில்,அன்றே கணித்த ஜோதிடம் தான் என்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது..
அதனால் தான் இன்றளவும், திருமணம் என்றாலே நாள் நட்சத்திரம் பார்த்து இரு மனங்களை திருமணத்தில் இணைக்கிறார்கள்....
தை
தமிழ் புத்தாண்டான தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால்,ஆண்களுக்கு ஆபத்து என சில வதந்திகள் வந்தது. இதனை தொடர்ந்து மனைவிமார்கள் கோவிலுக்கு சென்று வருவதும்,வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைப்பதும் பல பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகிறது
அதன்படி,
ஆண்களுக்கு ஆபத்து என நெல்லை மாவட்டத்தில் வதந்தி பரவியதால் அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் கணவர் ஆயுள் பெற வேண்டி மனைவிகள் தாலி கயிறு கட்டி வேண்டினர்.
ஜோதிடர்கள் சொன்னது என்ன ?
தமிழ் புத்தாண்டான தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால்,ஆண்களுக்கு ஆபத்து என ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் காட்டு தீ போல பரவியதால்,நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திருமணமான பெண்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் தாலி கட்டி வேண்டுய் உள்ளனர்.
ஆக மொத்தத்தில் இந்த நிகழ்வு நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும்,விளக்கேற்றிய பெண்கள் பெரு மூச்சி விட்டுள்ளனர்.இதுவரை விளக்கேற்றாமலும், மரத்தில் தாலி கட்டி வழிப்படாதவர்களும் ஏதோ ஒரு குழப்பத்தில் உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.