
14 பயணிகள் நேரம் கழிந்து வந்ததால் விமானத்தை தவறவிட்டனர். இதையடுத்து விமானம் சீக்கிரமாக புறப்பட்டு சென்றதாக குற்றச்சாட்டு எழவே அடுத்த விமானத்தில் இண்டிகோ நிறுவனம் இலவசமாக அனுப்பி வைத்தது.
கோவாவில் இருந்து இரவு ஹைதராபாத் செல்லும் இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று இரவு 10.50 மணிக்கு கோவாவில் இருந்து கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஹைதராபாத் செல்லும்.
இந்நிலையில் குறித்த நேரத்தை விட 25 நிமிடங்களுக்கு முன்பே இந்த விமானம் கிளம்பிவிட்ட பயணிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்த 14 பயணிகள் கோவா விமான நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து இண்டிகோ நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதாவது விமானத்திற்கு செல்லும் பாதையின் கதவு இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டதாகவும் விமானத்தைத் தவற விட்டவர்கள் 10.33 மணிக்குதான் வந்ததாகவும் தெரிவித்தது.
விமானம் கிளம்பப்போவதை பல முறை அறிவித்ததாகவும் விமானத்துக்கு வராத பயணிகளை போன் மூலம் தொடர்புகொள்ளவும் முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
வராத பயணிகளைத் தேடிக்கொண்டிருந்ததை மற்ற பயணிகள் சிலரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் எனவும் எங்கள் மீது எந்த தவறும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் விமானத்தை தவறவிட்ட 14 பேரையும் காலையில் எங்களது மற்றொரு விமானத்தில் இலவசமாக அனுப்பிவைத்ததாகவும் இண்டிகோ நிறுவனம் விளக்கியுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.