
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், தற்போது இந்தியா டிஜிட்டல் உலகை நோக்கி செல்கிறது. அதாவது மொபைல் மூலமே அனைத்து பண பரிவர்த்தனைகள் செய்ய வேண்டிய நிலைமை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதனை தொடர்ந்து தற்போது, Paytm நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இதன் மூலம் பல பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் .
இன்று, அதன் அடுத்த கட்டமாக, மேலும் ஒரு சலுகையை அறிவிச்சி இருக்கு Paytm .....
அதன்படி,
டோல் ப்ரீ நம்பர் : 1800-1800-1234 அறிவிச்சி இருக்காங்க .
இந்த நம்பருக்கு கால் செய்து அவர்கள் தெரிவிக்கும் வழிமுறையை கொண்டு , நாம் சுலபமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட முடியும்.
இதற்கு இன்டர்நெட் கனக்ஷன் தேவை இல்லை ....
சொல்லப்போனால், Paytm மூலம், பணபரிவர்தனை ( பெறவும் முடியும், அனுப்பவும் முடியும் )
Paytm பயன்படுத்துவது எப்படி ?
முதலில் Paytm இல் , ரிஜிஸ்டர் செய்யவும்.(நம் மொபைல் எண்ணை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து, பின் 4-digit Paytm PIN எண்ணை தேர்வு செய்யவும்.
பின்னர் மேல குறிப்பிட்ட டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்து, நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய மொபைல் எண், எவ்வளவு பணம், அவர்களுடைய 4-digit Paytm PIN பதிவு செய்யவும்.
இதுமட்டும் இல்லாமல், Paytm மூலம் மொபைல் ரீசார்ஜ், எலெக்ட்ரிசிட்டி பில், டேட்டா கார்டு, டி டி எச் உள்ளிட்ட அனைத்தும் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.
தற்போது Paytm வசதி மூலம், டாக்ஸி , ஆட்டோ, பெட்ரோல் பங்க், ஹோட்டல் காபி ஷாப் , பார்மசி மூவி டிக்கட் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம் .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.