
கோடைக்காலம் மழைக்காலம் என்று பார்க்காமல் கரப்பான் பூச்சிகள் வீட்டில் எல்லா இடங்களிலும் இருந்து நமக்கு தொல்லைகளைத் தரும். குறிப்பாக, இது கிச்சன் ஜிங்க், மேடைகளில் அதிகமாக இதுக்கும். கரப்பான் பூச்சிகளை விரட்ட நீங்கள் எல்லாவற்றையும் கண்டிப்பாக முயற்சித்திருப்பீர்கள், ஏன் ரசாயன மருந்துகள் கூட இதற்காக கடைகளில் வாங்கி பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் எந்த பயனும் இல்லையா? என்ன செய்வது என்று புலம்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான்.
கரப்பான் பூச்சிகள் வீட்டில் நோய்களைப் பரப்பும் என்பதால், அவற்றை வீட்டில் இருந்து அவ்வப்போது விரட்டுவது நல்லது. இதற்கு நீங்கள் கடைகளில் கிடைக்கும் இரசாயனங்களை பயன்படுத்தினால் அவை உங்கள் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இயற்கை வழியில் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஆரஞ்சு பழ தோலை பயன்படுத்துங்கள். ஆரஞ்சு பழ தோலை வைத்து எப்படி கரப்பான் பூச்சி விரட்ட முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இதற்கான விடை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே,
இந்த கட்டுரையை நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படிங்க: இத மட்டும் செய்யுங்க.. இனி வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லிகள் தொல்லை இருக்காது!
கரப்பான் பூச்சிகளை விரட்ட ஆரஞ்சு பழத் தோல் பயன்படுத்துவது எப்படி?
வீட்டின் சமையலறையில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை ஆரஞ்சு தோலை வைத்து சுலபமாக விரட்டலாம். ஏனெனில், ஆரஞ்சு தோலில் லிமோனின் என்ற கலவை உள்ளது. இது இயற்கையாகவே கரப்பான் பூச்சிகளை அகற்றிவிடும். இதற்கு ஆரஞ்சு தோலை நன்கு வெயிலில் காய வைத்து, பிறகு அதை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். கரப்பான் பூச்சிகளுக்கு அதிலிருந்து வரும் வாசனை பிடிக்காது என்பதால் அது அங்கிருந்து ஓடிவிடும். அதுமட்டுமின்றி, கரப்பான் பூச்சிகள் வரும் இடத்திலும் இந்த ஆரஞ்சு பழ தோலை நீங்கள் வைத்தால் கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும்.
இதையும் படிங்க: கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலயா? ஒரு எலுமிச்சை பழம் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!
ஆரஞ்சு பழ தோலை இதற்கும் பயன்படுத்தலாம் :
துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களை சுத்தம் செய்ய : சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பாத்திரங்களில் இருக்கும் கிரீஸை எவ்வளவுதான் சோப்பு போட்டு கழுவினாலும் அது சுத்தமாகாது. இதற்கு ஆரஞ்சு பழத் தோலை பயன்படுத்துங்கள், நல்ல தீர்வு கிடைக்கும்.
மைக்ரோவேவை சுத்தம் செய்ய : இதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணி எடுத்து அதில் ஆரஞ்சு தோலை போட்டு சில நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பின் அந்தக் கிண்ணத்தை மைக்ரோவேவிக் வைத்து சூடாக்கவும். இப்படி செய்தால் நீர் ஆவியாகி மைக்ரோவேனில் இருக்கும் உணவுகளின் மோசமான சுவையை சுலபமாக அகற்றி விடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.