முக அழகை மெருகேற்றும் இதழ்களை மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்ற கற்றாழை ஜெல் சிறந்த தீர்வாக அமைகிறது. தேனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து உதடுகளில் தடவி வந்தால் வறட்சி நீங்கி இளமை தோற்றம் கிடைக்கும்.
சருமத்திற்கு மட்டும் பராமரிப்பை கொடுத்துவிட்டு உதடுகளை சரிவர கவனிக்காவிட்டால் முகத்தின் அழகு முழுமையாக வெளிப்படாது. இதழ்களை அழகாக்க லிப்ஸ்டிக்தான் வழி என்று இல்லை. இயற்கையான வழிகளில் இதழ்களை பொலிவூட்டமாக வைத்திருக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் மென்மையான, இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெறலாம்.
கற்றாழை ஜெல் லிப் மாஸ்க்:
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
தேன் ஆகிய இரண்டு பொருள்கள் போதும்.
செய்முறை:
முதலில் கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதிலுள்ள ஜெல்லை பிரித்து கொள்ளவும். இந்த ஜெல்லை கரண்டியால் நன்றாக மசிக்கவும். இதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை உதடுகளில் பூசினால் வறண்ட உதடுகளும் மென்மையாக ஈரப்பதமாக மாறும்.
இதையும் படிங்க: Nathai soori Health Benefits: ஆண்கள் ஏன் நத்தை சூரி சாப்பிட வேண்டும்?
இது ரொம்ப முக்கியம்
கற்றாழை ஜெல் லிப் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக உதடுகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் உதடுகளில் தயார் செய்ய தேன், கற்றாழை ஜெல் பூச வேண்டும். இதை சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் உதடுகளை கழுவி சுத்தம் செய்யவும். இப்படி 2 முதல் 3 முறை செய்தால் உங்கள் உதடுகள் மென்மையாகவும், இளஞ்சிவப்பாகவும் தெரிய ஆரம்பிக்கும்.