Night Time Heartburn : இன்றைய வாழ்க்கை முறையில் இரவு தாமதமாக சாப்பிடுவது ஒரு பழக்கமாகிவிட்டது இதனால் அஜீரணம் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
நெஞ்சிருச்சு என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது பொதுவாக அஜீரணம், வயிற்று பிரச்சனை போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் இதய கோளாறு காரணமாகவும் வரலாம். இரவில் நெஞ்செரிச்சல் வருவது தூக்கத்தை தொந்தரவு செய்வது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தெரியுமா? சிலருக்கு பகல் இந்த பிரச்சனை வராது. ஆனால், இரவில் தூங்கும் போது தான் அனுபவிக்கிறார்கள். இரைப்பை அமிலம் உணவுக் குழாயில் திரும்புவதால் இப்படி நடக்கிறது. மேலும் தூக்கம் இல்லாத இரவுகள், சோர்வு மற்றும் நாள்பட்ட உடல்நல பிரச்சினைகளாலும் இது நிகழ்கிறது. எனவே அதைப் போக்க சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன. அவை..
இரவில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் :
இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லலாம். உதாரணமாக, இரவு தூங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவது இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இதனால் அமிலம் மீண்டும் உணவு குழாயில் பாய்கிறது. சில உணவுகள் கூட இதற்கு காரணம், அதாவது பானங்கள், காரமான உணவுகள், கொழுப்பு உணவுகள், காஃபின், ஆல்கஹால் மற்றும் சாக்லேட் போன்றவையாகும். ஏனெனில், இவை அதிக அமலத்தை கொண்டவை. இந்நிலையில், இரவில் ஏற்படும் அஜீரண பிரச்சனை போக்க நீங்கள் 5 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: நெஞ்செரிச்சலால் அவதிப்படுறீங்களா..? அப்ப பாலில் இந்த ஒரு பொருளை கலந்து நைட் குடிங்க..!
1. தூங்கும் தோரணை :
நீங்கள் தூங்கும் தோரணை சரியாக இருந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையை கண்டிப்பாக தடுக்கலாம். குப்புறப்படுத்து தூங்குவது அல்லது வலது பக்கமாக பார்த்து தூங்குவது நெஞ்செரிச்சலை மோசமாக்கும். எனவே நீங்கள் இரவில் இடது பக்கம் தூங்குவது தான் நல்லது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை சுலபமாக தடுக்கலாம்.
2. இரவு அதிகமாக சாப்பிடாதே!
அதுபோல இரவு உணவு பழக்கத்தை சரி செய்தால் இரவில் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சுலபமாக தீர்க்கலாம். இதற்கு அதிக கொழுப்புள்ள உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. மேலும் தூங்க செல்வதற்கு முன் சுமார் 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். முக்கியமாக, எளிதில் ஜீரணமாக கூடிய உணவை தான் சாப்பிட வேண்டும். அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பூண்டு, வெங்காயம், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவனக்குறைவா இருக்காதீங்க.. இந்த 4 சந்தர்ப்பங்களில் வந்தால் ஆபத்து..
3. காஃபின் மற்றும் மது அருந்தாதே..
நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் காஃபின் மற்றும் மது அருந்துவது. எனவே, காபி, டீ மற்றும் காஃபின், மது, குளிர்ப்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. மன அழுத்தம் :
மன அழுத்தம் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆகும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால், உடல் அதிக வயிற்று அமிலத்தை வெளியிடுகிறது. இதற்கு சில சுவாச பயிற்சிகள் தியானம் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். அதுமட்டுமின்றி, அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட்டார் மனநல மேம்படும் மற்றும் செரிமான ஆரோக்கிய மேம்படும்.
5. மருத்துவர் ஆலோசனை அவசியம் :
அரிதான நெஞ்செரிச்சல் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் தணிக்கலாம். ஆனால், நெஞ்செரிச்சல் ஒரு நிலையான பிரச்சனையாக இருந்தால் அது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கும். இது வாரத்திற்கு பலமுறை தோன்றினால், உணவு சாப்பிடும் போது விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால், தொடர்ந்து இருமல், எதிர்பாராத எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், உணவு குழாய் புண் அல்லது உணவு கொள்ளை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D