Monsoon Cloths Cleaning tips : மழை காலத்தில் ஆடைகளில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க உங்களுக்காக சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கடும் வெய்தல் அவதிப்பட்டு வரும் நோக்க மலைக்காலத்தில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் மழைம்காலத்தில் ஈரப்பதம் காரணமாக கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆபத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் துணிகளை துவைத்த பிறகு சரியாக சூரிய வெளிச்சம் இல்லாததால் ஆடைகளில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கும். எனவே இன்று உங்களுக்கு சில உதவி குறிப்புகளை சொல்லப்போகிறோம். அதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.
வாஷிங் மெஷினை நன்றாக சுத்தம் செய்யுங்கள் :
நீங்கள் உங்கள் துணிகளை வாஷிங்மெஷினில் துவைக்கிறீர்கள் என்றாலும், முதலில் வாஷிங் மிஷினை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வாஷிங் மெஷினை தினமும் பயன்படுத்தும் போது, அதிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். அதுவும், குறிப்பாக மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். இதற்கு நீங்கள் வாஷிங் மெஷின் டிரம்மில் சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு சாதாரண வாஷ் என்று ஆப்ஷனில் கொடுத்து கொடுக்கவும். இப்படி செய்தால் டிரம்மில் இருக்கும் துர்நாற்றம் முழுவதும் நீங்கி புதிதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் வீட்டில் நசநசவென ஈரப்பதமாக இருந்தால் 'இந்த' விஷயங்களை பண்ணுங்க..
மொத்தமாக துவைக்காதீர்கள் :
பெரும்பாலானோர் அழுக்கு கூடையில் துணிகளை குவித்து பிறகு அதை மொத்தமாக துவைப்பார்கள். வெயில் காலத்திற்கு இப்படி துவைத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மழைக்காலத்தில் இந்த பழக்கத்தை உடனே நிறுத்துங்கள். ஏனெனில், மழைக்காலத்தில் சூரியனின் வெளிச்சம் அவ்வளவாக இருக்காததால் மொத்தமாக துவைக்காதீர்க்ள். அவ்வப்போது துணிகளை துவைத்துவிடுங்கள்.
தரமான டிடர்ஜென்ட் பவுடரை பயன்படுத்துங்கள் :
மழைக்காலத்தில் துணிகளை துவைக்கும் போது நல்ல தரமான டிடர்ஜென்ட் பவுடரை பயன்படுத்துங்கள். துவைத்த பிறகும் துணி வாசனையாக இருக்கும். தரம் குறைவான பயன்படுத்தினால் அது துணிகளில் ஒட்டிக்கொள்ளும் மற்றும் வாசத்திற்கு பதிலாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் முகத்தை கழுவும் போது இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க.. இல்லனா பிரச்சினைதான்..!
எலுமிச்சை பயன்படுத்துங்கள் :
மழைக்காலத்தில் துணிகளை துவைக்கும் போது வாளியில் எலுமிச்சை சாறு கலந்து, துவைத்த துணிகளில் மீண்டும் ஒருமுறை இந்த தண்ணீரில் அலசி, பிறகு காய வைத்தால், ஆடைகளில் துர்நாற்றம் அடிக்காது மற்றும் பாக்டீரியாக்களும் அகன்று விடும்.
நாப்தலின் உருண்டைகள் :
மழைக்காலத்தில் துணிகளில் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். இதனால் ஒரு விதமான நாற்றம் அதில் அடிக்கும். எனவே நீங்கள் நாப்தலின் உருண்டைகளை அலமாரியில் வைத்தால், இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, ஆடைகளுக்கு நறுமணத்தை கொடுக்கும்.
அயன் செய்யுங்கள் :
மழை காலத்தில் துணிகளை துவைத்த பிறகு அது நன்கு காய்ந்து விட்டது என்று உடனே மடித்து விடாதீர்கள். ஏனெனில், துணிகளில் கண்டிப்பாக ஓரளவு ஈரப்பதம் இருக்கும் எனவே நீங்கள் அயன் செய்த பிறகு அவற்றை அலமாரியில் வைக்கவும். துணிகளை அயன் செய்யாமல் வைத்தால் அதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்.
ஃபேப்ரிக் கண்டிஷனர் பயன்படுத்துங்கள் :
மழைக்காலங்களில் துணிகளில் இருந்து வாசனை வர ஃபேப்ரிக் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது துணிகளில் அழுக்கை நீக்கவும், வாசனையாக இருக்கவும் உதவுகிறது. ஆனால், துணிகளின் அளவை பொறுத்து இதை பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், சிலருக்கு அது ஒத்துக்கிடாமல் தலைவலி, குமட்டல், தும்மல் ஏற்படுத்தும்.
துணிகளை நன்றாக காய வையுங்கள் :
மழைக்காலத்தில் ஈரமான துணிகளில் இருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தோல் எரிச்சல் உண்டாகும். எனவே, துணிகளை நன்றாக காய வைத்த பிறகு அலமாரியில் மடித்து வைக்கவும். இதனால் துணிகளில் துர்நாற்றம் அடிக்காது, வாசனையாகவும் இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D