அரிசி, பருப்பில் வண்டு தொல்லையை தடுக்கும் சூப்பர் டிப்ஸ்!! ஒரு வருஷம் ஆனாலும் வராது

Published : Jun 20, 2025, 04:26 PM IST
How to store pulses in rainy season

சுருக்கம்

மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக அரிசி, பருப்பில் சீக்கிரமாகவே பூச்சி வண்டுகள் வந்துவிடும். ஆகவே, அவை தடுப்பது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இது நமக்கு கோடை வெப்பத்திலிருந்து இதமாக உணர வைக்கிறது. பலருக்கும் மழை என்றாலே கொல்ல பிரியம். இந்த சீசனில் தொற்று நோய்கள் பிரச்சனை வருவது மட்டுமல்லாமல், கிச்சனில் இருக்கும் உணவு பொருட்கள் குறிப்பாக அரிசி பருப்பு வகைகள் விரைவில் கெட்டுப் போய்விடும்.

எவ்வளவுதான் நம் கவனமாக சேமித்து வைத்தாலும் அவற்றில் வண்டு, பூச்சிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மழை காலத்தில் காற்றில் ஈரப்பதம் தான் அரிசி பருப்புகளில் பூச்சிகள், வண்டுகள், பாக்டீரியாக்கள் உருவாகுவதற்கு காரணமாகின்றன இத்தகைய சூழ்நிலையில், மழை காலத்தில் அரிசி பருப்பு வகைகளில் வண்டு, பூச்சிகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மழைக்காலத்தில் அரிசி பருப்பு வகைகளில் வண்டு, பூச்சிகள் வராமல் தடுப்பது எப்படி?

1. வெயிலில் காய வைக்கவும் :

நல்ல வெயில் அடிக்கும் போது அரிசி பருப்புகளில் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். இதனால் அவற்றில் இருக்கும் ஈரப்பதம் நீங்கிவிடும். மழை காலம் வருவதற்கு முன்பே இந்த முறையை நீங்கள் கடைப்பிடித்தால் அரிசி பருப்பில் பூச்சி, வண்டுகள் வராமல் நீண்ட காலம் பிரஷ்ஷாக இருக்கும்.

2. வேப்பிலை :

வேப்பிலையில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி மற்றும் பூச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே பருப்பு வைக்கும் டப்பாக்களில் ஒரு சில வேப்பிலைகளை போட்டால் அவற்றில் பூச்சிகள் வராது. ஆனால், மாதத்திற்கு ஒரு முறை வேப்பிலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

3. கிராம்பு :

பருப்புகள் வைக்கும் டப்பாவில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் வண்டுகள் பூச்சிகள் அவற்றில் வராது. கிராம்புகளில் இருந்து வரும் வாசனை வண்டு, பூச்சிகளுக்கு பிடிக்காது.

4. கல் உப்பு :

அரிசி பருப்பு வைக்கும் டப்பாவில் கல் உப்பை சேர்த்தால் பூச்சிகள் வண்டுகள் வராது. ஆனால் கல் உப்பை நேரடியாக சேர்க்காமல் ஒரு துணியில் குப்பை போட்டு கட்டி பிறகு டப்பாவில் வைக்க வேண்டும். உப்பு ஈரப்பதத்தை உறிஞ்சும் மற்றும் பூச்சி வண்டுகளில் இருந்து அரிசி பருப்புகளை பாதுகாக்கும்.

5. மிளகு அல்லது பிரியாணி இல்லை :

அரிசி பருப்பு இருக்கும் டப்பாவில் மிளகு அல்லது பிரியாணி இலையை போட்டு வைத்தால் பருப்புகள் கெட்டும் போகாது. அதுமட்டுமின்றி அவற்றில் இருந்து வரும் வாசனை பூச்சி வண்டுகளுக்கு பிடிக்காது என்பதால் அவை வராது.

6. பெருங்காயம் :

பருப்பு வைக்கும் டப்பாவில் சின்ன பெருங்காயத் துண்டை வைத்தால் அவற்றில் பூச்சிகள் வண்டுகள் வராது. மற்றும் ஈரப்பதத்திலிருந்து பருப்பை பாதுகாக்கும்.

7. வாணலியில் வறுக்கவும் :

ஒருவேளை பருப்புகளில் பூச்சிகள் வந்தாலும் அதை வெயிலில் காய வைக்க முடியவில்லை என்றால் வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். பிறகு சலித்து டப்பாவில் போடவும். அதனுடன் கிராம்பு அல்லது வேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்