
யோகா முதன் முதலில் இந்தியாவில் தான் தோன்றிய பழங்கால பயிற்சிகளில் ஒன்றாகும். தற்போது இது உலகளவில் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21- அன்று தான் அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் இந்த 2205 ஆம் ஆண்டு நாளை(ஜூன்.21) சனிக்கிழமை சர்வதேச யோகா தினம் ஆகும். சரி இப்போது யோகா என்றால் என்ன? சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யோகா (Yoga)
யோகா என்பது நம்முடைய உடல் நிலை சுவாச நுட்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அல்லது ஒருங்கிணைக்கும் ஒரு பயிற்சியாகவும். இது நம்முடைய மனம் மற்றும் உடலை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. யோகா செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சுலபமாக குறைத்து விடலாம். யோகா உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறை தூண்டும் மற்றும் உடல் தோரணை சுழற்சியை மேம்படுத்து. அதே சமயம் யோகாவின் தியான அம்சமானது மன அமைதி, மன தெளிவு மற்றும் உணர்ச்சி நிலை தன்மையை வளர்க்கும். இவை நம்முடைய மனம் மற்றும் உடலுக்கு இடையேயான ஒரு இணக்கமான சமநிலையை உருவாக்க உதவுகின்றன.
யோகா விழிப்புணர்வு, சிந்தனை, நினைவகம், கவனம் ஆகியவற்றில் முக்கிய பங்கு. சொல்லப்போனால் மூளையின் பாகங்களை பலப்படுத்த யோகா தான் உதவுகிறது. யோகா செய்வதன் மூலம் ஒரு நபரின் உடல் வலிமை அதிகரிக்கும். அதே சமயம், தியானம் மற்றும் சுவாச பயிற்சிகள் செய்வதன் மூலம் கவலைகள் குறைந்து மன அமைதி ஒழுங்குப்படுத்தப்படும்.
சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது ஏன்?
2014 செப்டம்பர் 27 அன்று பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் பொது சபையில் சர்வதேச யோகா தின யோசனையை முன்மொழித்தார். யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். அதன்பிறகு 2014 டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாடுகள் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன் பிறகு 2015 ஜூன் 21ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்:
- யோகா மனம் மற்றும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதால் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் இதை ஏற்றுக் கொண்டு ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினத்தின் நோக்கமாகும்.
- மனிதர்களாகிய நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு யோகாவும் ரொம்பவே முக்கியம். யோகா நம்முடைய உடல் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை வழங்கும், உடல்சார் பிரச்சனைகளை தீர்க்க இயற்கை முறையில் உதவுவதுதான் யோகா. அதனால்தான் யோகாவை குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த தான் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினம் 2025 இன் கருப்பொருள் (International Yoga Day 2025 Theme):
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு 11 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், " ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா" ( yoga for one earth and one health) என்பதாகும். இது மனித நல்வாழ்வு, நம் வாழும் இந்த பூமிக்கு இடையான தொடர்பை குறிக்கிறது.
சர்வதேச யோகா தினத்தை நாம் கொண்டாடும் போது நமக்குள்ளும் நம்மை சுற்றி இருக்கும் உலகத்துடன் நல்லிணக்கத்தை வளர்க்க யோகா உதவுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.